88% பேர் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்
புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தடுப்பூசியை 88 விழுக்காட்டினர் போட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதாகவும் பூஸ்டர் ஊசி செலுத்தும் பணி கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கியது என்றும் அவர் டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளி சிறுவன் புறக்கணிப்பு: விமான நிறுவனத்துக்கு அபராதம்
புதுடெல்லி: மாற்றுத்திறனாளி சிறுவனை ஏற்றிச் செல்ல மறுத்த தனியார் விமான நிறுவனத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம். கடந்த மே 9ஆம் தேதி மாற்றுத்திறனாளி சிறுவன் அச்சத்தில் இருந்ததால் விமானத்தில் ஏற்ற மறுத்ததாகவும் இதன் காரணமாக, சிறுவனின் பெற்றோரும் விமானத்திற்குள் நுழைய வேண்டாம் என முடிவு செய்ததாகவும் அந்த விமான நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.

