இந்தியாவுக்கு மும்மடங்கு எண்ணெய் அனுப்பிய ரஷ்யா

இந்தியாவுக்கு மும்மடங்கு எண்ணெய் அனுப்பிய ரஷ்யா

1 mins read
aa68076f-1c87-47e4-b74c-c5bb80e6cc1b
-

புது­டெல்லி: ரஷ்­யா­வில் இருந்து முன் எப்­போ­தும் இல்­லாத அள­வில் இந்­தி­யா­வுக்­கும் சீனா­வுக்­கும் கச்சா எண்­ணெய் அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதர உலக நாடு­கள் பல­வும் உக்­ரேன் மீது போர் தொடுத்­த­தால் ரஷ்­யா­வி­டம் இருந்து எண்­ணெய் வாங்­கு­வதை நிறுத்­தி­விட்­டன.

இத்­த­கைய சூழ­லில் 74 முதல் 79 மில்­லி­யன் பேரல்­கள் அள­வி­லான எண்­ணெய்யை இந்­தி­யா­வுக்­கும் சீனா­வுக்­கும் கப்­பல் மூலம் அனுப்பி வைத்­துள்­ளது ரஷ்யா.

உக்­ரேன் போருக்கு முன்பு கடந்த பிப்­ர­வரி மாதம் 27 மில்­லி­யன் பேரல் எண்­ணெய்யை வாங்கி இருந்த நிலை­யில், தற்­போது கிட்­டத்­தட்ட மூன்று மடங்கு அதி­க­மாகி உள்­ளது.

இதன் மூலம் ரஷ்­யா­வி­டம் இருந்து அதிக அளவு எண்­ணெய் கொள்­மு­தல் செய்த ஐரோப்­பிய நாடு­களை ஆசியா பின்­னுக்­குத் தள்­ளி­யுள்­ளது.

மிகக் குறைந்த விலை­யில் எண்­ணெய் விநி­யோ­கத்தை ரஷ்யா அறி­வித்­ததை அடுத்து, சீனா­வும் இந்­தி­யா­வும் மில்­லி­யன் கணக்­கான எண்­ணெய் பேரல்­களை வாங்கி வரு­கின்­றன.

இத­னால் பல்­வேறு கடல் பாதை­களில் எண்­ணெய்க் கப்பல்­களின் போக்­கு­வ­ரத்து அதி­க­ரித்து வரு­கிறது. குறிப்­பாக, ரஷ்­யா­வில் வடக்கு துறை­மு­கங்­களில் இருந்து ஆசி­யா­வுக்கு அதிக அள­வில் எண்­ணெய் கொண்டு செல்­லப்­படு­கிறது. இந்நிலை மேலும் சில மாதங்கள் நீடிக்கக்கூடும்.