தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிணற்றில் மூன்று பெண்கள், இரண்டு சிறுவர்களின் சடலங்கள்

1 mins read
8dfb3207-c211-4b7c-9268-026ead6b295d
மாண்ட சகோதரிகள் மமதா மீனா, கமலே‌ஷ் மீனா மற்றும் கலு மீனா (படம்: இந்திய ஊடகம்) -

இந்தியாவின் ஜெய்ப்பூர் நகரில் ஒரு கிணற்றில் மூன்று பெண்கள், இரண்டு பிள்ளைகள் ஆகியோரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த மூன்று பெண்கள் சகோதரிகள் என்றும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களை மணம் புரிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாண்ட சிறுவர்கள் அவர்களுடைய பிள்ளைகள் எனவும் கூறப்பட்டது. ஒரு பிள்ளைக்கு நான்கு வயது என்றும், மற்றொரு பிள்ளை ஒரு மாதக் குழந்தை என்றும் கூறப்பட்டது.

மாண்ட பெண்களில் இருவர் நிறைமாத கர்ப்பிணிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்பில் மாண்ட பெண்களுடைய கணவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் மனைவிகளை வரதட்சணைக்காகத் துன்புறுத்தி வந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாண்ட பெண்களுக்கு வயது 27, 23, 20. அவர்கள் மூவருக்கும் இளம் வயதிலியே திருமணம் செய்துவிட்டதாக அவர்களது குடும்பத்தினர் கூறினர்.

கடந்த சில ஆண்டுகளாக தங்களுடைய கணவர்கள் அவர்களை வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வருவதாக அவர்கள் தங்கள் தந்தையிடம் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் காணாமல் போய்விட்டதாக பெண்வீட்டார் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

விசாரணை மேற்கொண்டதில், ஒரு கிணற்றில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று மனித உரிமை குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.