புதுடெல்லி: தஞ்சாவூர் மகளிர் சுயஉதவிக் குழுவினரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
வானொலி வாயிலாக நேற்று மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறுகையில், "ஊரகப் பகுதிகளில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு முக்கிய பங்கு வகித்து வருகிறார்," என்றார்.
மேலும், "தஞ்சாவூரைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுவினர், புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் மட்டுமின்றி இதர பொருள்களையும் சிறப்பாக விற்று வருகின்றனர்.
"தஞ்சாவூர் பொம்மையை அவர்கள் எனக்குப் பரிசாக அனுப்பினார்கள். அந்தப் பரிசில் பாரத நாட்டின் மணம் வீசுகிறது. தாய்மை சக்தியின் ஆசி நிரம்பி யிருக்கிறது. வட்டார கலாசார மணம் வீசும் பரிசை எனக்கு அனுப்பியமைக்கு, நான் தஞ்சாவூர் சுயஉதவிக் குழுவிற்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"இந்த தஞ்சாவூர் பொம்மை எத்தனை அழகானதாக இருக்கிறதோ, அத்தனை அழகானது பெண்களின் அதிகாரப் பங்களிப்பின் புதிய பயணம். இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பெண்களின் சுயசேவை சமூகமே நடத்தும் அங்காடியை, தஞ்சாவூரின் பிரதானமான இடத்திலே திறந்திருக்கின்றார்கள்.
"இதன் பராமரிப்புப் பொறுப்பு முழுவதையுமேகூட இந்தப் பெண்களே ஏற்றிருக்கின்றார்கள்.
"ஒரு கடையின் மூலமாக புவிசார் குறியீட்டோடு, கை
வினைப் பொருள்களின் விற்
பனையில் கணிசமான முன்னேற்றம் காணக் கிடைக்கிறது. இந்த முயற்சி காரணமாக, கைவினைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் வருவாயும் அதி
கரிப்பதால் அவர்களின் அதிகாரப் பங்களிப்பும் ஏற்படுகிறது," என்றார் மோடி.
மோடி: எனக்கு வழங்கிய பரிசில் தாய்மையின் ஆசி உள்ளது

