கணவர், மனைவி, இரு குழந்தைகள்-ஒரே தேதியில் பிறந்தநாள்

கணவர், மனைவி, இரு குழந்தைகள்-ஒரே தேதியில் பிறந்தநாள்

1 mins read
88e1e53e-f81d-4b38-8c72-7bb46343f3a7
நால்வரும் சேர்ந்து கொண்டாடிய பிறந்த நாள். படம்: இந்திய ஊடகம் -

கண்­ணூர்: கேரள மாநி­லம் கண்­ணூர், பட்­டு­வம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் அனீஷ்­கு­மார். 1980 மே 25ஆம் தேதி பிறந்­த­வர். இவர் மணம் புரிந்த அஜிதா என்­ப­வர் 1987ஆம் ஆண்டு அதே மே 25ஆம் தேதி பிறந்­த­வர். இந்த ஒற்­று­மை­யில் அவர்­கள் அடைந்த இன்­பம் அத்­து­டன் நின்­று­வி­ட­வில்லை.

2012ஆம் ஆண்டு அனீஷ்­கு­மா­ருக்­கும் அஜி­தா­வுக்­கும் மகள் பிறந்­தது.

என்ன ஆச்­ச­ரி­யம், அந்­தக் குழந்தை பிறந்த தேதி­யும் மே 25. இது மட்­டுமா? ஏழாண்­டு­க­ளுக்­குப் பிறகு 2019ஆம் ஆண்டு மகன் பிறந்­த­தும் மே 25ஆம் தேதி தான்.

இதன் பிறகு ஒட்­டு­மொத்த குடும்­ப­மும் வியப்­பின் எல்­லைக்கே சென்­றது. கடந்த ஈராண்­டு­க­ளாக மே 25ஆம் தேதி இந்­தக் குடும்­பத்­தில் உள்ள நால்­வ­ரும் பிறந்த நாள் கொண்­டாடி வரு­வதை அறிந்து பட்­டு­வம் பகு­திக்­கா­ரர்­கள் வியக்­கி­றார்­கள்.

மே 25 அதி­ச­யம் குறித்து விளக்­கிய அனீஷ் குமார், "இது எதேச்­சை­யாக நடந்­தது. இதற்­காக நாங்­கள் எந்­தத் திட்­ட­மி­ட­லும் செய்­ய­வில்லை. மகள் ஆரத்­யா­வுக்கு மே 23 என மருத்­து­வர் நாள் குறித்­துக் கொடுத்­தி­ருந்­தா­லும் மே 25ல்தான் பிறந்­தார்," என்­றார்.