நச்சுணவால் வாந்தி, மயக்கம்: சுருண்டு விழுந்த 97 குழந்தைகள்

நச்சுணவால் வாந்தி, மயக்கம்: சுருண்டு விழுந்த 97 குழந்தைகள்

1 mins read
e4bb07ba-0cf2-4911-bbc7-0b547fed1cfc
-

போபால்: மத்­தி­யப் பிர­தே­சத்­தில் உள்ள மன்­டலா மாவட்­டத்­தில் சிங்­கார்­பூர் என்ற பகுதி உள்­ளது.

பழங்­குடி மக்­கள் அதி­கம் வசிக்­கும் பகு­தி­யான இங்கு நேற்று முன் தினம் பானி பூரி திரு­விழா நடத்­தப்­பட்­டது.

இதில் அக்­கம் பக்­கத்­தி­லுள்ள கிரா­மங்­களில் இருந்து நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் பங்­கேற்று பானி பூரி சாப்­பிட்­ட­னர். இந்­நி­லை­யில், பானி பூரி விழா­வில் சாப்­பிட்ட பல்­வேறு குழந்­தை­க­ளுக்கு அன்று மாலை உடல் நலக்­கு­றைவு ஏற்­பட்­டது. நச்­சு­ணவு கார­ண­மாக பல குழந்­தை­கள் வாந்தி, வயிற்று வலி­யால் பாதிக்­கப்­பட்­டன. 97 குழந்­தை­கள் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­கள் அனை­வ­ரும் ஒரே கடை­யில் பானி பூரி சாப்­பிட்­டது தெரி­ய­வந்­த­தால் காவல்­து­றை­யி­னர் கடை உரி­மை­யா­ள­ரைக் கைது செய்து உண­வுப்­பொ­ருள்களைக் கைப்­பற்­றி­னர்.