செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
60f6baf0-a050-42b4-bf3a-f39652a28d6d
-

விபத்தில் ஏழு பேர் மரணம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பஹ்ரைச்-லக்கிம்பூர் நெடுஞ்சாலையில் நேற்றுக் காலை கர்நாடகாவில் இருந்து 16 பேருடன் அயோத்தி நோக்கிச் சென்றுகொண்டிருந்த சுற்றுலாப் பேருந்து மோதிபூர் பகுதியில் உள்ள நனிஹா சந்தையில் நுழைந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

நிலக்கரி இறக்குமதி

புதுடெல்லி: இந்தியாவில் நிலவும் பற்றாக்குறையைச் சரிசெய்ய, வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய கோல் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா நிலக்கரியை இறக்குமதி செய்கிறது.

கிணற்றுக்குள் சடலமாக மிதந்த

3 அக்கா-தங்கை, 2 பிள்ளைகள்

ஜெய்ப்பூர்: கிணறு ஒன்றிலிருந்து அக்கா-தங்கை மூவருடன் இரு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டனர். கலு மீனா, 25, மம்தா மீனா, 23, கமலேஷ் மீனா, 20, ஆகிய மூன்று சகோதரிகளும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் டுடு என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அண்ணன்-தம்பி மூவரை மணந்த இவர்கள், மே 25ஆம் தேதி முதல் காணா மல் போயினர். உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக, நேற்று முன்தினம் கிராமத்தின் கிணற்றுக்குள் அக்கா, தங்கை மூவரும் இவர்களின் இரு குழந்தைகளும் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளில் ஒன்றுக்கு 4 வயது. மற்றொரு குழந்தை பிறந்து 22 நாள் கள்தான் ஆகின்றது. இது கொலையா, தற்கொலையா, இவர்களின் மரணத்துக்கு வரதட்சணைக் கொடுமை காரணமா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.