கொரோனாவால் பெற்றோரை இழந்த சிறார்களுக்கு மாதம் ரூ.4,000

கொரோனாவால் பெற்றோரை இழந்த சிறார்களுக்கு மாதம் ரூ.4,000

1 mins read
669636a5-d1a7-4819-9e4e-bfbb7ee58fa3
-

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் 4,000 ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

நேற்று இந்த உதவித்தொகையை பிரதமர் மோடி வழங்கினார்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்காக கல்விக் கடன் வாங்க விரும்பினால், அவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உதவி செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மேலும், அச்சிறார்களின் பராமரிப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்றார் பிரதமர்.