பெங்களூரு: மூன்று வேளையும் 'நூடல்ஸ்' மட்டுமே சமைத்த மனைவியை விவாகரத்து செய்துள்ளார் ஆடவர் ஒருவர்.
தினமும் காலை, மதியம், இரவு உணவாக வெறும் 'நூடல்ஸ்' மட்டுமே சமைத்த மனைவியிடம், அதற்கான காரணத்தைக் கேட்டபோது, தமக்கு அது மட்டுமே சமைக்கத் தெரியும் என்று மனைவி கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் விவாகரத்து செய்துகொள்ள ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்.
தாம் விசாரித்த விவாகரத்து வழக்குகளில் இதுவும் ஒன்று என்று கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய எம்.எல்.ரகுநாத் தெரிவித்துள்ளார்.
இப்போதெல்லாம் அற்ப கார ணங்களுக்காக விவாகரத்து செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவ்வழக்கை 'நூடல்ஸ் வழக்கு' என்று குறிப்பிட்ட அவர், விவாகரத்து பெற்ற ஆடவர், தன் மனைவியால் எவ்வாறு தினமும் மளிகைக் கடைக்குச் சென்று நூடல்ஸ் மட்டுமே கேட்டு வாங்கிவர முடிந்தது என்ற கேள்வியுடன் கூடிய புகாரை எழுப்பியதாகவும் தெரிவித்தார். திருமணமான தம்பதியர் குறைந்தபட்சம் ஓராண்டாவது இணைந்து வாழ்ந்தால்தான் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள முடியும் என்றார் அவர்.

