விமானப் பயிற்சி இயந்திரத்தில் கோளாறு: 90 விமானிகளுக்கு அதிரடித் தடை

விமானப் பயிற்சி இயந்திரத்தில் கோளாறு: 90 விமானிகளுக்கு அதிரடித் தடை

1 mins read
5e0a137f-bafe-48e6-9651-8a9f1c517d77
-

புது­டெல்லி: விமா­னப் பயிற்­சிக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் 'சிமு­லேட்­டர்' இயந்­தி­ரத்­தில் ஏற்­பட்ட கோளாற்றைக் கண்­ட­றிந்து சரி­செய்­யா­மல் விமா­னி­க­ளுக்கு அதில் பயிற்சி அளித்­த­மைக்­காக ஸ்பைஸ்­ஜெட் நிறு­வ­னத்­துக்கு பத்து லட்­சம் ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிறு­வ­னத்­தைச் சேர்ந்த 90 விமா­னி­க­ளுக்குத் தற்­கா­லிகத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­கு­ந­ர­கம் அறி­வித்­துள்­ளது.

கோளாறு உள்ள இயந்­தி­ரத்­தைப் பயன்­ப­டுத்தி அந்த விமா­னி­க­ளுக்குப் பயிற்சி அளிக்­கப்­பட்­டதே இந்த நட­வ­டிக்­கைக்­குக் கார­ணம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

90 விமா­னி­களும் 'போயிங் 737 மேக்ஸ்' விமா­னங்­களை இயக்கி வந்­த­னர். எனவே, அவர்­க­ளுக்கு மீண்­டும் பயிற்சி அளிக்க வேண்­டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

'போயிங் 737 மேக்ஸ்' ரக விமா­னங்­கள் இரண்டு முறை விபத்­துக்­குள்­ளா­ன­தால் கடந்த 2019ஆம் ஆண்டு இந்த விமா­னங்­களை இயக்க பல்­வேறு நாடு­கள் தடை விதித்­தன. பின்­னர் இந்­தத் தடை நீக்­கப்­பட்­டதை அடுத்து, ஸ்பைஸ்­ஜெட் நிறு­வ­னம் அவற்றை இயக்­கத் தொடங்­கி­யது.

இந்­நி­லை­யில், விமான நிறு­வ­னங்­கள் தங்­க­ளது விமா­னி­க­ளுக்கு விதி­மு­றை­க­ளைச் சரி­யா­கப் பின்­பற்றி பயிற்சி அளிக்­கின்­ற­னவா என விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­கு­ந­ர­கம் ஆய்­வும் சோத­னை­யும் மேற்­கொண்­டது.

அப்­போது ஸ்பைஸ்­ஜெட் விமா­னி­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப் பயன்­ப­டுத்­தப்­படும் சிமு­லேட்­டர் இயந்­தி­ரத்­தில் கோளாறு இருப்­பது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, சரி­யான பயிற்சி இன்றி விமா­னி­க­ளைத் தொடர்ந்து விமா­னங்­கள் இயக்க அனு­ம­திப்­பது பய­ணி­க­ளின் பாது­காப்­புக்கு உகந்த செயல் அல்ல எனக் கரு­து­வ­தாக இயக்­கு­ந­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

மேலும், ஸ்பைஸ்­ஜெட் நிறு­வ­னத்­துக்கு பத்து லட்­சம் ரூபாய் அப­ரா­தம் விதித்­த­து­டன், 90 விமா­னி­க­ளுக்­கும் தடை விதித்­துள்­ளது.