திருவனந்தபுரம் வந்து எரிபொருள் நிரப்பிச் செல்லும் இலங்கை விமானங்கள்

திருவனந்தபுரம் வந்து எரிபொருள் நிரப்பிச் செல்லும் இலங்கை விமானங்கள்

1 mins read
9daa6480-eb96-4773-8cb8-37de82ab40da
-

திரு­வ­னந்­தபுரம்: பொரு­ளி­யல் பிரச்­சி­னை­யில் சிக்­கித் தவிக்­கும் இலங்­கை­யில் விமான எரி­பொ­ரு­ளுக்­கும் தட்­டுப்­பாடு நில­வு­கிறது. இதை­ய­டுத்து இலங்கை விமா­னங்­கள் பல­வும் கேரள தலை­ந­கர் திரு­வ­னந்­த­பு­ரத்­திற்கு வந்து எரி­பொ­ருள் நிரப்­பிச் செல்­கின்­றன.

எரி­பொ­ருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக இலங்­கை­யில் இருந்து இயக்­கப்­படும் அனைத்­து­லக விமா­னங்­கள் பல­வும் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

எனி­னும் சில வழித்­த­டங்­களில் இயக்­கப்­படும் விமா­னங்­கள் மூலம் விமான நிறு­வ­னங்­க­ளுக்குப் பெரும் லாபம் கிடைப்­ப­தால், குறிப்­பிட்ட சில நாடு­க­ளுக்கு மட்­டும் விமா­னங்­கள் இயக்­கப்­படு­கின்­றன.

குறிப்­பாக ஜெர்­ம­னி­யின் பிராங்க்­ஃபர்ட், ஆஸ்­தி­ரே­லி­யா­வின் மெல்­பர்ன் ஆகிய நக­ரங்­க­ளுக்­கான விமா­னங்­கள், இலங்­கை­யில் இருந்து புறப்­பட்டு திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யத்­திற்கு வந்து, அங்கு எரி­பொ­ருள் நிரப்­பிச் செல்­கின்­றன.

மேலும், விமா­னப் பணி­யா­ளர்­களை நேர அடிப்­ப­டை­யில் மாற்­றும் மைய­மா­க­வும் திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. வான்­வ­ழி­யா­கக் கணக்­கி­டும்­போது, சென்­னை­யைவிட திரு­வ­னந்­த­பு­ரம் விமான நிலை­யம் அருகே இருப்­ப­தால், இலங்கை விமா­னங்­கள் அங்கு சென்று எரி­பொ­ருள் நிரப்­பு­வது வச­தி­யாக உள்­ளது.

இதற்­கி­டையே, இந்­திய விமான நிறு­வ­னங்­கள் இது­கு­றித்து கூறு­கை­யில், இந்­திய விமா­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும் அதே விலை­யில்­தான் இலங்கை விமா­னங்­க­ளுக்­கும் எரி­பொ­ருள் வழங்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­வித்­தன.

மேலும், இலங்கை விமா­னங்­க­ளுக்கு வழங்­கப்­படும் எரி­பொ­ரு­ளால் நல்ல வரு­வாய் கிடைப்­ப­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.