அண்டை நாடுகளில் படிப்பைத் தொடர நடவடிக்கை: ஜெய்சங்கர் தகவல்
புதுடெல்லி: ஆபரேஷன் கங்கா மீட்பு நடவடிக்கையின் மூலம் உக்ரேனில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்ட அனைத்து மருத்துவ மாணவர்களும் உக்ரேனின் அண்டை நாடுகளில் படிப்பைத் தொடர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்டை நாட்டு பல்கலைக்கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். உக்ரேனில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டனர்.
கூலிப்படையை வைத்து பெண்ணை வன்கொடுமை செய்த கொடூரம்
ஹைதராபாத்: தனது கணவருடன் தகாத உறவு கொண்டி ருப்பதாக சந்தேகித்த பெண்ணைப் பழிவாங்க கூலிப் படையை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மனைவி கைதானார். ஹைதராபாத்தைச் சேர்ந்த காயத்ரி தன் கணவருடன் கோன்டாபூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அரசுப் பணித்தேர்வுக்குப் பயிற்சிபெற்று வந்த காயத்ரியின் கணவருக்கும் அப்பகுதி யைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக காயத்ரி சந்தேகம் கொண்டார். இதையடுத்து, அண்மையில் காயத்ரியை தன் வீட்டிற்கு அழைத்து இயல்பாகப் பேசியபடியே தன் அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு கூலிப்படையைச் சேர்ந்த நால்வர் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உள்ளனர். மேலும் அதை தனது கைபேசியில் காணொளியாகப் பதிவு செய்துள்ளார் காயத்ரி. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததன் பேரில் காயத்ரி கைதானார்.

