புதுடெல்லி: தாம் சுய நினைவை இழந்துவிட்டதாகக் கூறப்படுவது உண்மையல்ல என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
சமாதி என்பது முற்றிலும் நல்ல விஷயம் என்றும் நல்ல உடல்நிலையைக் குறிக்கும் என்றும் அவர் சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில தினங்களில் தாம் திரும்பி வரப்போவதாகவும் வழக்கமான பணிகளைக் கவனிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேற்று முன்தினம் அவர் சுயநினைவற்ற நிலைக்குச் சென்றுவிட்டதாக ஒரு தகவல் பரவியது.

