மோடி: ஏழைகளுக்காக மேலும் பாடுபடுவோம்

மோடி: ஏழைகளுக்காக மேலும் பாடுபடுவோம்

1 mins read
6a90bc19-e0a9-487e-927b-b0e8e18e3666
-

புது­டெல்லி: சேவை, நல்ல நிர்­வா­கம், ஏழை­கள் நலன் ஆகி­ய­வற்­றுக்­காக தொடர்ந்து பாடு­பட மத்­திய அரசு உறுதி பூண்­டுள்­ள­தாக பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளர்.

நாட்டு மக்­க­ளின் விருப்­பங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக மட்­டுமே மத்­திய அரசு கடந்த எட்டு ஆண்­டு­க­ளைச் செல­விட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான அரசு பொறுப்­பேற்று எட்டு ஆண்டு­கள் நிறை­வ­டைந்­துள்­ளன. இது தொடர்­பாக டுவிட்­ட­ரில் பதி­விட்டுள்ள அவர், தமது பெய­ரி­லான 'நமோ' செய­லி­யில் எட்டு ஆண்­டு­கால வளர்ச்­சிப் பய­ணம் குறித்த தொகுப்பு இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் அதில் உள்ள தக­வல்­க­ளைப் புது­மை­யான வழி­களில் காண முடி­யும் என்­றும் தெரி­வித்­துள்­ளார்.