இந்தியாவிலிருந்து வரும் தேயிலையைத் திருப்பி அனுப்பும் பிற நாடுகள்

இந்தியாவிலிருந்து வரும் தேயிலையைத் திருப்பி அனுப்பும் பிற நாடுகள்

1 mins read
07577e83-3a64-4e8a-a610-09ef0106d6f9
இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் தேயிலையை கடந்த சில முறையாக பிற நாடுகள் தரக் குறைவு என்று திரும்ப அனுப்பி உள்ளன. படம்: ஈபிஏ -
Google News Preferred Icon

இந்தியாவிலிருந்து தருவிக்கப்படும் தேயிலையை கடந்த சில முறையாக பிற நாடுகள் தரக் குறைவு என்று திரும்ப அனுப்பி உள்ளன.

இந்திய தேயிலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கும் அதிகமாக ரசாயனமும் பூச்சிக்கொல்லி மருந்தும் கலந்து இருப்பதே இதற்குக் காரணம்.

இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்‌ஷுமான் கனோரியா பிடிஐ நிறுவனத்திடம் இதைத் தெரிவித்தார்.

இலங்கைப் பொருளியல் நெருக்கடியால் அந்த நாட்டின் தேயிலை ஏற்றுமதி பெரிதும் சரிந்துவிட்டது. அந்த இடத்தைப் பிடிக்கலாம் என்று இந்தியா பார்க்கிறது.

ஆனால் தேயிலையில் வழக்கத்தைவிட அதிகமான ரசாயனங்கள் கலந்து இருப்பதாகவும் அதனால் மற்ற நாடுகள் அதை நிராகரிப்பதாகவும் திரு கனோரியா சொன்னார்.

இந்திய தேயிலையை வாங்கும் உள்ளூர் நிறுவனங்களும் அதைத் திருப்பி அனுப்பி வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியா 195.90 மில்லியன் கிலோகிராம் தேயிலையை உற்பத்தி செய்தது.

பிரிட்டன் ஆஸ்திரேசியா போன்ற காமன்வெல்த் நாடுகள், ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்தியத் தேயிலையை அதிகம் இறக்குமதி செய்கின்றன.