எல்லையில் போர் விமானங்களைக் குவித்த சீனா: பதிலடி கொடுத்த இந்தியா

எல்லையில் போர் விமானங்களைக் குவித்த சீனா: பதிலடி கொடுத்த இந்தியா

1 mins read
ae81efef-cfde-4690-b46e-7b47069b7c04
-

ஸ்ரீநகர்: எல்­லைப் பகு­தி­யில் சீன ராணு­வம் தனது போர் விமா­னங்­களை நிறுத்தி வைத்­துள்­ள­தாக வெளி­யான தக­வல் புதிய பதற்றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

தற்­போது இந்­திய எல்­லைக்கு மிக அரு­கா­மை­யில் சீன ராணு­வத்­தின் 25 போர் விமா­னங்­கள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நீண்­ட­கா­ல­மா­கவே இந்­திய, சீன எல்­லைப் பகு­தி­யில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரு­கிறது. குறிப்­பாக லடாக் எல்லைப் பகு­தி­யில் சீன ராணு­வம் அவ்­வப்­போது ஊடு­ரு­வு­வதும் இந்­திய ராணு­வம் அத்­த­கைய ஊடு­ரு­வல் முயற்­சி­களை தடுத்து நிறுத்தி, பதி­லடி கொடுப்­ப­தும் வாடிக்­கை­யா­கி­விட்­டது.

லடாக் பகு­தி­யில் சீனா புதிய உள்­கட்­ட­மைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக அண்­மை­யில் இந்­தி­யா­வுக்கு வருகை புரிந்­த­போது அமெ­ரிக்க ராணு­வத் தள­பதி எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தார். இது இந்­தியா எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டிய காலக்­கட்­டம் என்­றும் அவர் அறி­வு­றுத்­தி­னார்.

இந்­நி­லை­யில், ஜம்மு காஷ்­மீ­ரின் கிழக்கு லடாக் அருகே சீனா­வின் ஹோடன் விமா­னத் தளம் செயல்­பட்டு வரு­கிறது. அங்கு ஏற்­கெ­னவே மிக் 21 ரக போர் விமா­னங்­களை நிறுத்தி வைத்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில் அதே தளத்­தில் 25 அதி­ந­வீன ஜெ-11, ஜெ-20 ரக போர் விமா­னங்­களை சீனா நிறுத்தி வைத்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இத­னால் அதிர்ச்சி அடைந்த இந்­திய ராணு­வம், பதி­லடி கொடுக்­கும் நட­வ­டிக்­கை­யாக, சுகோய், மிக், மிரேஜ் ரக போர் விமா­னங்­களை எல்­லை­ய­ருகே தயார் நிலை­யில் நிறுத்தி வைத்­துள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது. மேலும் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­யை­யும் தீவி­ரப்­ப­டுத்தி உள்­ளது.