ராஞ்சியில் ஆர்ப்பாட்டம்: காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

ராஞ்சியில் ஆர்ப்பாட்டம்: காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

2 mins read
373df27e-1f97-4799-9884-ce0e883971a1
ராஞ்சி நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென வன்முறை வெடித்தது. அப்போது ஆர்ப்பாட்டக்காரர் களை நோக்கி காவல்துறை அதிகாரி ஒருவர் தன் கைதுப்பாக் கியைக் காண்பித்து எச்சரிக்கை விடுத்தார். அங்கு துப்பாக்கிச்சூட்டில் இருவர் மாண்டனர்.படம்: ஏஎஃப்பி -

ராஞ்சி: நபி­கள் நாய­கம் குறித்து பாஜக செய்­தித் தொடர்­பா­ளர்­கள் தெரி­வித்த அவ­தூ­றான கருத்­து­களைக் கண்­டித்து உத்­த­ரப் பிர­தே­சம், ஜார்க்­கண்ட் மாநி­லங்­களில் கண்­டன ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

அப்­போது வன்­முறை வெடித்­ததை அ­டுத்து காவல்­துறை துப்­பாக்கிச்­சூடு நடத்­தி­ய­தில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் இரு­வர் பலி­யா­கி­னர். ஏரா­ள­மா­னோர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­களை தெரி­வித்த செய்­தித்­தொ­டர்­பா­ளர்­கள் இரு­வர் மீதும் பாஜக கட்சித் தலைமை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அவர்­களில் ஒரு­வ­ரான நூபுர் சர்மா மீது டெல்லி, மும்பை காவல்­துறை வழக்­குப்­ப­தி­வும் செய்­துள்ளது.

இந்­நி­லை­யில் இரு­வ­ரை­யும் கைது செய்ய வலி­யு­றுத்தி இஸ்­லா­மிய அமைப்­பு­கள் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

ஜார்க்­கண்ட் மாநி­லத் தலை­ந­கர் ராஞ்­சி­யில் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று நூற்­றுக்­க­ணக்­கான இஸ்­லா­மி­யர்­கள் சாலை­களில் திரண்டு தங்­கள் எதிர்ப்பை பதிவு செய்­யும் வகை­யில் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது காவல்­து­றை­யி­னர் மீது உடைந்த புட்­டி­களும் கற்­களும் வீசி தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து கூட்­டத்­தைக் கலைக்க காவல்­து­றை­யி­னர் தடி­யடி நடத்­தி­னர். மேலும் துப்­பாக்­கிச்­சூடும் நடத்­தப்­பட்­டது.

இதை­ய­டுத்து ராஞ்சி நக­ரில் இணை­யத் தொடர்பு தற்­கா­லி­க­மாக துண்­டிக்­கப்­பட்­டது. ஊர­டங்­கும் அமல்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில், அங்கு தொடர்ந்து பதற்­றம் நீடித்து வரு­வ­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே, உத்­த­ரப் ­பி­ர­தேச மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

பெரும்­பா­லான பகு­தி­களில் ஆர்ப்­பாட்­டங்­கள் அமை­தி­யாக நடந்து முடிந்­த­தா­க­வும் சில இடங்­களில் மட்­டும் காவல்­து­றை­யினர் மீது சிலர் கல்­வீசி தாக்க முற்பட்­ட­தா­க­வும் உத்­த­ரப்­ பி­ர­தேச அர­சின் மூத்த செய­லா­ளர் அவி­னாஷ் அவாஸ்தி தெரி­வித்­தார்.

ஆறு மாவட்­டங்­களில் இது­வரை 136 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இதே­போல் மேற்­கு­வங்க மாநிலம், கோல்­கத்­தா­வுக்கு கிழக்கே உள்ள பல மாவட்­டங்­களில் வார இறுதி நாள்­களில் இணை­யத்­தொ­டர்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் ரயில் போக்­கு­வ­ரத்து இடை­யூறு ஏற்­ப­டுத்­தி­ய­து­டன், ஒரு காவல் நிலை­யத்­தை­யும் முற்­று­கை­யிட்டு போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.