ஒரு மாத உண்டியல் வசூல் ரூ.130 கோடி

ஒரு மாத உண்டியல் வசூல் ரூ.130 கோடி

1 mins read
6569ee84-af21-4dd0-bf7b-d7930c9207a6
-

திருமலை: கடந்த மே மாதம் மட்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடி கிடைத்துள்ளது.

அக்கோவில் வரலாற்றில் ஒரு மாதத்தில் இவ்வளவு பெரிய தொகை வந்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோடை விடுமுறைக் காலம் என்பதால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.