மூதாட்டியை தாக்கிக் கொன்ற யானை அவர் சடலத்தையும் சின்னாபின்னம் ஆக்கியது

மூதாட்டியை தாக்கிக் கொன்ற யானை அவர் சடலத்தையும் சின்னாபின்னம் ஆக்கியது

1 mins read
52aee380-367a-4671-8603-8d4e1c95aa70
படம்: இணையம் -

ஒடிசாவில் 70 வயது மூதாட்டியை ஒரு யானை தாக்கிக் கொன்றது.

அத்துடன் விட்டுவைக்காமல் இறுதிச் சடங்கு வரை காத்திருந்த யானை, அவரது சடலத்தை மிதித்து வீசி சின்னாபின்னம் ஆக்கியது.

ஒடிசாவின் மயூர்பஞ்ச் வட்டாரத்தில் ராய்ப்பால் என்ற கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்தது இந்தச் சம்பவம்.

தண்ணீர்க் குழாயிலிருந்து மாயா முர்மு எனும் அந்த மூதாட்டி குடத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது டால்மா வனவிலங்கு சரணாலயத்திலிருந்து பாதை தவறிய வந்த காட்டு யானை அவரைத் தாக்கியது.

யானை மிதித்ததை அடுத்து, மாயா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டதாக அங்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாலையில் அவரது இறுதிச் சடங்கு நடந்துகொண்டிருந்தபோது திடீரென்று அங்கு வந்த காட்டு யானை, கிடத்தி வைக்கப்பட்டிருந்த அவரது சடலத்தை எடுத்தது.

மூதாட்டியின் சடலத்தை மீண்டும் மிதித்துவிட்டு, பின்னர் அதை தூக்கி எரிந்துவிட்ட யானை, அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தது.

சில மணி நேரம் கழித்து மூதாட்டியின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.