'செஸ் ஒலிம்பியாட்' சுடர் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார் மோடி

'செஸ் ஒலிம்பியாட்' சுடர் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார் மோடி

2 mins read
b9207041-583d-4a2b-889a-d1526cde24aa
-

புது­டெல்லி: செஸ் ஒலிம்­பி­யாட் போட்டி தொடங்­கு­வ­தற்கு முன்பு 'ஒலிம்­பி­யாட் சுடர் ஓட்­டம்' நடை­

பெ­றும். சுடர் ஓட்­டம் முக்­கிய நக­ரங்­க­ளுக்கு பய­ணம் செய்து இறு­தி­யாக போட்டி நடை­பெ­றும் மாமல்­ல­பு­ரத்­துக்கு வந்­த­டை­யும்.

44வது செஸ் ஒலிம்­பி­யாட் போட்டி இந்­தி­யா­வில் முதல் முறை­யாக தமிழ் நாட்­டில் நடத்­தப்­ப­டு­கிறது. இந்­தப் போட்டி சென்­னையை அடுத்த மாமல்­ல­பு­ரத்­தில் ஜூலை 28ஆம்­தேதி முதல் ஆகஸ்டு 10ஆம் தேதி வரை நடை­பெ­றும்.

இந்­தி­யா­வில் நடை­பெ­றும் மிகப்­பெ­ரிய விளை­யாட்டு திரு­வி­ழா­வான செஸ் ஒலிம்­பி­யாட் போட்­டி­யில் 188 நாடு­களை சேர்ந்த வீரர், வீராங்­க­னை­கள் கலந்து கொள்­கி­றார்­கள். பொதுவிருது மற்­றும் பெண்­கள் பிரி­வில் போட்­டி­கள் நடக்­கிறது.

இதற்­கி­டையே போட்­டியை யொட்டி அனைத்­து­லக செஸ் கூட்­ட­மைப்பு மற்­றும் அகில இந்­திய செஸ் கூட்­ட­மைப்பு ஆகி­யவை இணைந்து செஸ் ஒலிம்­பி­யாட் சுடர் ஓட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்த முடிவு செய்­துள்­ளது.

இனி ஒவ்­வொரு முறை­யும் செஸ் ஒலிம்­பி­யாட் போட்டி தொடங்­கு­வ­தற்கு முன்பு 'ஒலிம்பியாட் சுடர் ஓட்­டம்' நடை­பெ­றும்.

இந்த சுடர் ஓட்­டம் செஸ் உரு­வான இந்­தி­யா­வில் இருந்து தொடங்கி போட்டி நடை­பெ­றும் நக­ரத்தை அடை­வ­தற்கு முன்பு அனைத்து கண்­டங்­க­ளுக்­கும் பய­ணிக்­கும்.

இந்த முறை நேர­மின்மை கார­ண­மாக சுடர் ஓட்­டம் இந்­தி­யா­வில் மட்­டும் நடை­பெ­றும் என்று அனைத்­து­லக செஸ் கூட்­ட­மைப்பு அறி­வித்து இருந்­தது. சுடர் பய­ணிக்­கும் பாதை மற்­றும் தேதி விரை­வில் அறி­விக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.

இந்த நிலை­யில் செஸ் ஒலிம்­பி­யாட் போட்­டிக்­கான சுடர் ஓட்­டம் வரு­கிற 19ஆம் தேதி டெல்­லி­யில் தொடங்­கும் என்று தக­வல் வெளி­யாகி உள்­ளது.

செஸ் ஒலிம்­பி­யாட் சுடர் ஓட்­டத்தை 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு பிர­த­மர் நரேந்­திர மோடி தொடங்கி வைக்­கி­றார்.

இந்­தச் சுடர் ஓட்­டத்­தில் பங்­கேற்க வரு­மாறு தமி­ழ­கத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்­டர் பிரக்­ஞா­னந்தா, அனைத்­து­லக மாஸ்­டர் ஆர்.வை‌ஷாலி ஆகியோருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

போட்டி அமைப்பு குழு இயக்­கு­நர் பரத்­சிங் சவு­கான் இந்த சுற்­ற­றிக்­கையை அனுப்பி உள்­ளார்.

இந்­தச் சுடர் ஓட்­டம் முக்­கிய நக­ரங்­க­ளுக்குப் பய­ணம் செய்து இறு­தி­யாக போட்டி நடை­பெ­றும் மாமல்­ல­பு­ரத்­துக்கு வந்­த­டை­யும்.

செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் பிரக்‌ஞானந்தா சாம்பியன் பட்டத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.