தாக்கப்பட்டு மூதாட்டி இறந்தபின் விடாமல் துரத்திய யானை

தாக்கப்பட்டு மூதாட்டி இறந்தபின் விடாமல் துரத்திய யானை

1 mins read
90a9d62c-a85f-4e42-9f74-4073b57f3c0c
-

புவ­னேஷ்­வர்: ஒடி­சா­வில் யானை

தாக்­கு­த­லால் மூதாட்டி ஒரு­வர் உயி­ரி­ ழந்த நிலை­யில், அவ­ரது இறு­தி ­ச­டங்­கி­லும் அதே யானை புகுந்து அட்­ட­கா­சம் செய்த சம்­ப­வம் மக்­க­ளி­டையே பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

வியா­ழ­னன்று கிணற்­றில் தண்­ணீர் எடுக்­கச் சென்­றார் 70 வயது மூதாட்டி முர்மு. அப்­போது தல்மா வன­வி­லங்கு சர­ணா­ல­யத்­தைச் சேர்ந்த யானை ஒன்று தாக்கி படு­கா­யம் அடைந்­தார் முர்மு.

அவ­ரின் அல­றல் சத்­தம் கேட்டு உத­விக்கு வந்­த­வர்­கள் யானையிடம் இருந்து முர்­மு­வைக் காப்­பாற்றி மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர்.

ஆனால் படு­கா­ய­ம­டைந்­தி­ருந்த மூதாட்டி முர்மு மருத்­து­வ­மனை

யிலேயே உயி­ரி­ழந்­தார்.

பிரே­தப் பரி­சோ­த­னைக்­குப் பிறகு மூதாட்­டிக்கு இறு­திச்­ச­டங்கு நடத்த குடும்­பத்­தி­னர் முர்­மு­வின் உடலை தூக்­கிச் சென்­ற­னர்.

இறு­திச் சடங்கு நடந்த இடத்­திற்­கும் பெரும் சத்­தத்­து­டன் மீண்­டும் வந்­தது அதே யானை.

அதைப் பார்த்த உற­வி­னர்­கள் அங்­கி­ருந்து ஓடிச் சென்­ற­னர்.

யானை அந்த மூதாட்­டி­யின் உடலை தூக்கி வீசி­யது. தொடர்ந்து சட­லத்­ தைத் தாக்கி, தூக்­கிப்­போட்டு மிதித்து, நசுக்­கி­, உடலைச் சின்னாபின்னமாக்கி விட்டு பலத்த சத்­த­து­டன் அங்­கி­ருந்து அகன்­றது.

அதைப்­பார்த்த மக்­கள் பீதி­யில் உறைந்து போனார்­கள். மீண்­டும் சிதைந்து போன மூதாட்­டி­யின் உடல் பாகங்களைச் சேர்த்து இறு­திச்

சடங்கு செய்து முடித்­த­னர்.

ஒரே நாளில் மூதாட்­டியை இரண்டு முறை தாக்­கிய யானையின் கோபத்தை யும் அது பழிக்­குப்­பழி வாங்­கி­ இருக்குமோ என்ற சந்­தே­கம் அங்­கி­ருந்­த­வர்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.