பாலக்காடு: அண்மையில் தங்கக் கடத்தல் தொடர்பாக சிலர் தன்னுடன் பேசியதாக ஒரு ஆடியோவையும் ஸ்வப்னா வெளியிட்டிருந்தார். இதை
யடுத்து முதல்வர் பதவியிலிருந்து பினராயி விஜயன் விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் முதன்முதலாக இதுபற்றி பினராயி விஜயன் பேசுகையில், "சிலர் என்னை மிரட்ட பார்க்கிறார்கள். அதெல்லாம் வீண் முயற்சியே. கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பும் இதுபோல் என் மீது வீண் புகார்கள் எழுந்தன. ஆனால் உண்மை என்ன என்பது மக்களுக்குத் தெரியும். அதனால்தான் சிறப்பான வெற்றியை மக்கள் வாரி கொடுத்து எங்களை ஆட்சியில் அமர வைத்தார்கள்.
"நம் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவோர் முன் மண்டியிடமாட்டேன். குற்றச்சாட்டுகள் கூறுவதாலோ போராட்டத்தில் ஈடுபடுவதாலோ எனக்கோ, அரசுக்கோ எந்த வகையிலும் பாதிப்பு இல்லை. எங்கள் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த அரசு உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும்," என பினராயி விஜயன் தெரிவித்தார்.
இதற்கிடையே, தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் வக்கீல் ஆர்.கிருஷ்ணராஜ் வாதாடி வருகிறார். அவர் ஒரு பேருந்து ஓட்டுநரை விமர்ச்சித்த வழக்கில் மாட்டி, முன் பிணையில் வெளிவராதபடி அவர் மீது வழக்குப் பதிவு செய்திருக் கின்றனர் கேரள போலிசார்.
அதனால் மனமுடைந்த ஸ்வப்னா, "முதல் அமைச்சர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் நான் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை. என்னுடன் இருப்பவர்
களைக் குறிவைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. என்னைக் கொன்று விடுங்கள். அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்
பட்டுவிடும்," என்று செய்தியாளர்கள்
சந்திப்பில் கூறினார்.

