செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9dd96e9e-73fd-49c7-9152-a19a2725277b
-

எண்ணெய் லாரி கவிழ்ந்து நால்வர் பலி

ஒடிசா: ஒடிசா மாநி­லத்­தின் பார­தீப் நக­ரில் இருந்து நயா­கர் பகுதி நோக்கி பெட்­ரோல் மற்­றும் டீசல் ஏற்­றிக்­கொண்டு 2 லாரி­கள் புறப்­பட்­டுச் சென்­றன. நேற்று அதி­காலை 2 மணி­ய­ள­வில் லாரி­களில் ஒன்று குஸ்மி ஆற்­றில் கவிழ்ந்து விபத்­தில் சிக்­கி­யது. இதைக் கண்ட மற்­றொரு லாரி­யில் இருந்த ஒரு­வர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கச் சென்றார். ஆனால், திடீ­ரென எரி­பொ­ருள் நிரம்­பி­யி­ருந்த லாரி வெடித்­துச் சித­றி­யது. அதனால் முதல் லாரியில் இருந்த 4 பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர். மேலும் காப்பாற்றச் சென்றவர்

படு­கா­யம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது ஒரிசா மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனையில் சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், அவர் மேலும் உடல்நிலை சீராக இருப்பதைத் தெரிந்துகொள்ள தற்பொழுது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச திருமண உடை

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தூத்தா கிராமத்தில் வசிக்கும் நசீர் தூத்தா, ஆடை வங்கி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த 'ஆடை வங்கி' மூலம் மணப்பெண்களுக்கு லெங்கா, சேலைகள் இலவசமாக தருகிறார். பொருளாதார நெருக்கடி காரணமாக இதுபோன்ற உடைகளை வாங்க முடியாமல் வறுமையில் இருக்கும் பெண்களுக்காகவே இலவசமாக இதுபோன்ற உடைகளை வழங்கி வருகிறார். திருமணம் முடிந்ததும் அவற்றைத் திருப்பித் தந்தால் போதும். இதற்காக அவர் பணம் பெறுவது இல்லை. பலரும் அவரது இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். திருமணம் என்பது வாழ்வில் நடைபெறும் இனிமையான நிகழ்வு. அதை மகிழ்ச்சியுடன் வறுமையில் உள்ளவர்களும் கொண்டாட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் என்கிறார் நசீர் தூத்தா.