முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் வீழ்ச்சி

1 mins read
cd06a48a-00ed-4984-9b76-588a7244d57d
படம்: ஏஎஃப்பி -

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்து, ஓர் அமெரிக்க டாலருக்கு 78.283 ரூபாய் என்று ஆனது.

சிங்கப்பூரில் ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 56.15 ரூபாய் என்றானது.

அண்மைய மாதங்களாக சரிந்து வரும் ரூபாயின் மதிப்பு திங்கள் (ஜூன் 13) அன்று 0.6 விழுக்காடு வரை குறைந்தது.

இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு 78 ரூபாய் எனும் அளவுக்கு வீழ்ச்சி கண்டிருப்பது இதுவே முதல் முறை.

இதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தைகளிலும் இன்று சரிவு ஏற்பட்டது. பிஎஸ்ஈ சென்செக்ஸ் குறியீடு, 2.8 விழுக்காடு வரை குறைந்தது.

அமெரிக்க டாலரின் மதிப்பு கூடி வரும் வேளையில் இந்திய ரூபாயும் மற்ற ஆசிய நாணயங்களும் வலு இழந்து காணப்படுகின்றன. இந்திய ருபாயின் மதிப்பை நிலைப்படுத்த அந்த நாட்டு மத்திய வங்கி, இருப்பில் உள்ள வெளிநாட்டு நாணயங்களை விற்று வருகிறது.

அமெரிக்காவில் பணவீக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதால் அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை இந்த வாரத்தில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.