தன்னுடைய உறவுக்கார பெண்ணின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத ஆடவர் மாண்ட பெண்ணின் சிதைவில் குதித்த தன்னுடை உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இந்தத் திடுக்கிடும் அசம்பாவிதம் நடந்தது.
சிதைக்கு முன் தலை வணங்கி அதற்குள் அவர் குதித்ததாக சம்பவத்தைப் பார்த்தவர்கள் கூறினர். அவரைக் காப்பற்ற எடுக்கப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை. அந்த 21 வயது ஆடவருக்கு உடல் முழுதும் மோசமான தீக் காயங்கள் ஏற்பட்டன.
ஜோதி டாகா எனும் பெண் கிணற்றில் தவறி விழுந்து மாண்டதாகக் கூறப்பட்டது. அவருடைய இறுதிச் சடங்கு சனிக்கிழமையன்று நடைபெற்றது.
சிதைக்குத் தீ மூட்டிய பின் அவரது உறவினர்கள் வீடு திரும்பினர். மையானத்துக்குச் சற்று தாமதமாக வந்த கரண் என்பவர் ஜோதியின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், எரியும் சிதையில் விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
அவருடைய இறுதிச் சடங்கு ஜோதியின் சிதைக்கு அருகில் நடந்தது.
சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் .

