கொழும்பு: இலங்கையின் முன்னாள் சபாநாயகரும் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான சமல் ராஜபக்சே (படம்) தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.
மேலும், முழுநேர அரசியலில் இருந்து தாம் விலகுவது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது வெளியிடுவார் எனத் தெரிகிறது.
ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பதவி, பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர். கடந்தவாரம் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே தமது நாடாளுமன்ற பதவியைத் துறந்தார்.
அதனைத்தொடர்ந்து இப்போது சமல் ராஜபக்சேவும் எம்பி பதவியை துறப்பதற்கு தயாராகி வருகிறார்.
கடந்த மே 9ஆம் தேதி கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு ராஜபக்சே குடும்பத்தார் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினர்.
அதனைத் தொடர்ந்து தற்போது அவர்கள் எம்பி பதவியையும் துறந்து அரசியலில் இருந்து ஒதுங்குகின்றனர்.

