மோடி உத்தரவு: ஒன்றரை ஆண்டுகளில் ஒரு மி. அரசாங்க வேலைகளை நிரப்புக

மோடி உத்தரவு: ஒன்றரை ஆண்டுகளில் ஒரு மி. அரசாங்க வேலைகளை நிரப்புக

1 mins read
9e796008-83d8-4ea2-8517-27a4eea27371
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 18 மாதங்களில் ஒரு மில்லியன் பேரை வேலையில் சேர்க்கும்படி அரசாங்க அமைப்புகளிடம் கூறியுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு மில்லியன் பேரை வேலையில் அமர்த்தும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுஅமைச்சுகளையும் அரசாங்கத் துறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) அன்று இதைத் தெரிவித்தது.

எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் அமைச்சுகளிலும் மனிதவளம் குறித்த மறுஆய்வு நடத்தப்பட்ட பின்னர் திரு மோடி அவ்வாறு கூறியுள்ளார்.

வேலையின்மை குறித்து எதிர்க்கட்சிகள் மோடி அரசாங்கத்தைக் குறை வறி வரும் வேளையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

பல்வேறு அரசாங்கத் துறைகளில் நிறைய வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளன.