அதிபர் வேட்பாளர் தொடர்பில் கைகோக்கும் எதிர்க்கட்சிகள்

அதிபர் வேட்பாளர் தொடர்பில் கைகோக்கும் எதிர்க்கட்சிகள்

2 mins read
788c6f21-8981-46c9-ab42-52d541545f46
-

புது­டெல்லி: இந்­தி­யா­வின் அடுத்த அதி­ப­ருக்­கான தேர்­த­லில் இன்று வேட்­பு­ம­னுத் தாக்­கல் தொடங்­க­விருக்­கிறது.

ஆளும் பார­திய ஜன­தாக் கட்சி வருங்­கா­லத்­தில் கொண்­டு­வ­ரும் முக்­கிய மசோ­தாக்­க­ளுக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் வகை­யில் கருத்­தொ­ரு­மித்த வேட்­பா­ள­ரைக் கள­மி­றக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளது. இதன் தொடர்­பில் அது தனது தோழ­மைக் கட்­சி­க­ளு­டன் பேச்சு நடத்­தி­வ­ரு­கிறது.

இவ்­வே­ளை­யில், காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான எதிர்க்­கட்­சி­களும் 2024ஆம் ஆண்டு நடை­பெ­ற­வி­ருக்­கும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லைக் கருத்­தில்­கொண்டு பொது வேட்­பா­ள­ரைக் கள­மி­றக்­கத் தீர்­மா­னித்­துள்­ளன. ஆனால் பொது­வேட்­பா­ளரை முடி­வு­செய்­வ­தில் இழு­பறி நீடிக்­கிறது.

தேசி­ய­வா­தக் காங்­கி­ரஸ் தலை­வ­ரான சரத் பவார் அனைத்­துக் கட்­சி­க­ளு­ட­னும் நல்ல அணு­கு­மு­றை­யைக் கொண்­டி­ருப்­ப­தால் அவ­ரைக் கள­மி­றக்­கி­னால்­தான் எதிர்க்­கட்­சி­கள் அனைத்­தை­யும் ஓர­ணி­யில் திரட்­டிச் செயல்­பட முடி­யும் என்று காங்­கி­ர­ஸின் சோனியா காந்தி கரு­து­கி­றார்.

இட­து­சாரி, சிவ­சேனா போன்­ற­வை­யும் சரத்­ப­வா­ருக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

இதற்­கி­டையே திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வ­ரும், மேற்கு வங்க முதல்­வ­ரு­மான மம்தா பானர்ஜி, தி.மு.க. உள்­ளிட்ட மாநி­லக் கட்­சி­கள், இதர தேசிய கட்­சி­க­ளைச் சேர்ந்த 22 தலை­வர்­களுக்கு அதி­பர் தேர்­தல் தொடர்­பா­கப் புது­டெல்­லி­யில் ஆலோ­சனை நடத்த அழைப்பு விடுத்­துள்­ளார்.

நேற்று புது­டெல்­லி­யில் அவர் திரு சரத்பவா­ரைச் சந்­தித்­துப் பேசி­னார். அம­லாக்­கத் துறை விசா­ர­ணையை ராகுல் காந்தி எதிர்­நோக்­கும் சிர­ம­மான கால­கட்­டத்­தில் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் காங்­கி­ரஸ் பங்­கேற்­கும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சரத்பவா­ருக்கு பெரும்­பா­லான கட்­சி­கள் ஆத­ரவு அளிக்­கும் பட்­சத்­தில் மம்தா பானர்ஜி, சந்­திர சேகர ராவ், நவீன் பட்­நா­யக் போன்ற தலை­வர்­களும் ஆத­ரிப்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. 81 வய­தா­கும் சரத் பவார் பொது வேட்பாள­ராக ஒரு­ம­ன­தா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வார் என்று கரு­த­ப்படு­கிறது.