அசாம் நிலச்சரிவில் நால்வர் பலி

அசாம் நிலச்சரிவில் நால்வர் பலி

1 mins read
e346f771-f7aa-4e2a-a446-a90380790627
-

கௌஹாத்தி: அசாம் தலை­நகர் கௌஹாத்­திக்கு அருகே நிசார்­பூ­ரில் கன­ம­ழை­யால் நேற்று நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது.

தொழி­லா­ளர்­கள் நான்கு பேர் நிலச்­ச­ரி­வால் ஏற்­பட்ட இடி­பா­டு­களில் சிக்கி உயி­ரி­ழந்­த­னர். இதை­ய­டுத்து சம்­பவ இடத்­திற்­குச் சென்ற அவ­சர உத­விக் குழு­வி­னர் சட­லங்­களை மீட்­ட­னர்.

உயி­ரி­ழந்த நால்­வ­ரும் கட்டு­மா­னத் தொழி­லா­ளி­கள் என்­றும் அங்கு வாடகை வீட்­டில் வசித்­து­வந்­த­வர்­கள் என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது.

அடுத்த சில நாள்­க­ளுக்கு அசாம், மேகா­லயா ஆகிய மாநி­லங்­களில் கனத்த மழை பெய்­யும் என வானிலை ஆய்வு நிலை­யம் எச்­ச­ரித்­துள்­ள­தால் மக்­கள் அவ­சி­ய­மின்றி வெளி­யில் செல்லவேண்­டா­மென அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.