106 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுவன் மீட்பு

106 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய சிறுவன் மீட்பு

1 mins read
79d388aa-2c72-4ed7-9e58-062f60dbde30
படம்: டுவிட்டர் -

நான்கு நாள்களுக்கும் மேலாக ஆள்துளை கிண்ற்றில் சிக்கியிருந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். சிறுவனுக்கு பேசுவதிலும் காது கேட்பதிலும் குறைபாடு இருப்பதால், அவனை மீட்பது மிகப் பெரிய சவாலாக அமைந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல், தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். கிணறு கிட்டத்தட்ட 24 மீட்டர் ஆழமானது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவ அதிகாரிகள் உள்பட பலர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த நான்கு நாள்களாக சிறுவனுக்கு குழாய் வழியாக பிராணவாயு அனுப்பப்பட்டு வந்தது. ராகுலின் உடல்நிலையைக் கண்காணிக்க ஒரு காமிரா கருவி கிணற்றுக்குள் இறக்கப்பட்டது.

சிறுவன் சிக்கியிருந்த ஆழ்துளை கிணற்றில் ஒரு பாம்பும் காணப்பட்டது. ஆனால் அதைக் கண்டு அவன் பயப்படாமல், நிதானமாக இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

ராகுல் சற்று பலவீனமாக இருந்தாலும் அவன் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.