ஸ்வப்னா: பலமுறை கேரள முதல்வரை சந்தித்துள்ளேன்

ஸ்வப்னா: பலமுறை கேரள முதல்வரை சந்தித்துள்ளேன்

2 mins read
94029a46-c2b9-40c5-a147-a86b2f05d7c4
பினராயி விஜயன். படம்: தகவல் ஊடகம் -

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யனை தாம் பல­முறை நேரில் சந்­தித்­துப் பேசி­ய­தாக ஸ்வப்னா சுரேஷ் கூறி­யுள்­ளார்.

இந்­தச் சந்­திப்­பு­கள் தொடர்­பான ஆதா­ரங்­கள் தம்­மி­டம் இருப்­ப­தா­க­வும் தேவைப்­ப­டும்­போது அவற்றை வெளி­யிடத் தயார் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

தங்­கக்­க­டத்­தல் வழக்­கில் கேரள முதல்­வர் பின­ராயி விஜ­ய­னுக்கு தொடர்பு உள்­ள­தாக நீதி­மன்­றத்­தில் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார் ஸ்வப்னா சுரேஷ்.

மேலும், முதல்­வ­ரின் நண்­பர் தம்மை சந்­தித்­துப் பேசி­ய­தா­க­வும் தம்மை தங்­கக் கடத்­தல் வழக்­கில் இருந்து விடு­வித்து, வெளி­நாட்டுக்கு அனுப்பி வைப்­ப­தாக தம்­மி­டம் தெரி­விக்­கப்­பட்­டது என்­றும் ஸ்வப்னா அண்­மை­யில் செய்தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

"நான் யார் என்­பதே தமக்­குத் தெரி­யாது என்று கேரள முதல்­வர் கூறு­கி­றார். நான் அவரை திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள அதி­கா­ர­பூர்வ இல்­லத்­தில் பல­முறை சந்­தித்து உள்­ளேன். அவரை மட்­டு­மல்ல அவ­ரது குடும்­பத்­தி­ன­ரை­யும் சந்தித்துப் பேசி­யுள்­ளேன்.

"தேவைப்படும் போது இதை ஆதாரத்துடன் தெரிவிப்பேன். கேரள முதல்வரை சந்தித்தது உண்மை," என்று ஸ்வப்னா தெரிவித்துள்ளார்.

முதல்­வ­ரின் குடும்­பத்­தா­ருக்­கும் தங்­கக் கடத்­த­லில் தொடர்­புள்­ள­தாக இவர் கூறி­யது கேரள அர­சி­யல் களத்­தில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதை­ய­டுத்து பின­ராயி விஜ­யன் உட­ன­டி­யா­கப் பதவி விலக வேண்­டும் என எதிர்க்­கட்­சி­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன. மாநி­லம் தழு­விய அள­வில் அவை போராட்­டங்­கள் நடத்­து­கின்­றன.

காங்­கி­ரஸ், பாஜக முஸ்­லிம் லீக் உள்­பட கட்­சி­யி­னர் சாலை மறி­யல் உட்­பட பல போராட்­டங்­களில் தொடர்ந்து ஈடு­பட்­டுள்ள நிலை­யில், கேரள முதல்­வர் செல்­லும் இட­மெல்­லாம் போராட்­டம் நடத்­தப்­ப­டு­கிறது.

அண்­மை­யில் பின­ராயி விஜ­யன் கண்­ணூ­ரில் இருந்து விமா­னம் மூலம் திரு­வ­னந்­த­பு­ரம் வந்­த­டைந்­தார். விமா­னம் தரை­யி­றங்­கி­ய­தும் அதில் பய­ணம் செய்த இளை­ஞர் காங்­கி­ரஸ் அமைப்பைச் சேர்ந்த மஜீத், நவீன்­கு­மார் ஆகிய இரு­வ­ரும் திடீ­ரென எழுந்து பின­ராய் விஜ­ய­னுக்கு எதி­ராக முழக்­கங்­கள் எழுப்­பி­னர்.

மேலும், முதல்­வ­ருக்கு அருகே செல்ல முயன்­ற­போது, அங்­கி­ருந்த முன்­னாள் அமைச்­சர் ஜெய­ரா­ஜன் அவர்­களை கீழே தள்­ளி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து விமா­னத்­துக்­குள் முதல்­வ­ரைக் கொல்ல முயற்சி நடந்­த­தா­கக் கூறி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யி­னர் கேர­ளா­வில் பர­வ­லா­க ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் காங்­கி­ரஸ் தலைமை அலு­வ­ல­கம் மீது கற்­கள் வீசி தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அங்­கி­ருந்த வாக­னங்­கள் அடித்து நொறுக்­கப்­பட்­டன.

மேலும், கோழிக்­கோடு அருகே உள்ள பேராம்­பிரா என்ற இடத்­தில் உள்ள காங்­கி­ரஸ் கட்சி அலு­வ­ல­கம் மீது மர்மக் கும்­பல் சர­மா­ரி­யாக நாட்டு வெடி­குண்­டு­களை வீசி தாக்­கு­தல் நடத்­தி­ய­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பத்­த­னம் திட்டா, ஆலப்­புழா உள்­பட பல பகு­தி­களில் உள்ள காங்­கி­ரஸ் அலு­வ­ல­கங்­களும் சூறை­யா­டப்­பட்­டன.

இதற்­கி­டையே, விமா­னத்­தில் வைத்து காங்­கி­ரஸ் தொண்­டர்­கள் தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறி, அக்­கட்சி ­யி­ன­ரும் போராட்­டங்­கள் நடத்தி வரு­கின்­ற­னர். நேற்று முன்­தி­னம் காங்­கி­ரஸ் கருப்­பு­தி­னப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டது.

சில இடங்­களில் காங்­கி­ரஸ், கம்­யூ­னிஸ்ட் தொண்­டர்­கள் இடையே மோதல் வெடித்­தது. இரு­த­ரப்­பி­ன­ரும் கைக­லப்­பில் ஈடு­பட்­ட­னர். இத­னால் கேர­ளா­வில் பதற்ற மான சூழ்­நிலை நிலவி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இடையே ஆங்காங்கே மோதல்