கணவர்கள் நூதன வழிபாடு

கணவர்கள் நூதன வழிபாடு

1 mins read
34d7fa4e-84c7-48b5-8a20-39390be46e1f
வழிபாட்டில் ஈடுபட்ட ஆடவர்கள். படம்: ஊடகம் -

மும்பை: தற்­போது உள்ள மனைவி, மீண்­டும் எந்த ஜென்­மத்­தி­லும் தங்­கள் வாழ்க்கைத் துணை­யாக வந்து­வி­டக்­கூ­டாது என அவு­ரங்­க­பாத் நகர ஆண்­கள் சிலர் அரச மரத்தைச் சுற்றி வந்து நூதன வழிபாடு மேற்­கொண்­ட­னர்.

'வட் பூர்­ணிமா' நாளில் பெண்­கள் தங்­கள் திரு­மண வாழ்க்கை மகிழ்ச்­சி­யாக இருக்­க­வும் ஏழு பிறவி­க­ளி­லும் தற்­போது உள்ள கண­வரே வாழ்க்­கைத் துணை­யாக அமை­ய­வும் வேண்­டிக்­கொள்­வர்.

ஆனால் அவு­ரங்­கா­பாத்­தில் மனை­வி­யால் பாதிக்­கப்­பட்­டோர் சங்­கத்­தைச் சேர்ந்த ஆண்­கள் அதற்கு நேர்­மா­றா­கச் செயல்­பட்­டுள்­ள­னர்.

"பெண்­கள் நல­னுக்­காக உள்ள பல சட்­டங்­கள் தவ­றா­கப் பயன்­படுத்­தப்­ப­டு­கின்­றன. இத­னால் ஆண்­க­ளுக்கு அநீதி இழைக்­கப்­படு­கிறது. இது­கு­றித்து விழிப்­புணர்வு ஏற்­ப­டுத்­தவே இந்த நூதன வழி­பாடு," என்­கி­றார் சங்­கத்­தின் தலை­வர் பாரத் புலாரே.