மம்தா முயற்சி: தடைபோடும் சந்திரசேகர ராவ்

மம்தா முயற்சி: தடைபோடும் சந்திரசேகர ராவ்

2 mins read
d6a5d3ad-17f1-4b9d-87f7-51bf5ea7aae0
-

புது­டெல்லி: அதி­பர் தேர்­த­லில் பாஜ­கவை வீழ்த்த வேண்­டும் என்­ப­தில் முனைப்பு காட்­டி­னா­லும், எதிர்க்­கட்­சி­கள் இடையே இது­தொ­டர்­பாக மறை­முக மோத­லும் நிலவி வரு­கிறது.

இந்­நி­லை­யில் எதிர்க்­கட்­சி­களை ஒன்று திரட்­டும் வித­மாக மேற்­கு­வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை தெலுங்­கானா ராஷ்ட்­ரீய சமிதி கட்­சி­யின் தலை­வ­ரும் அம்­மா­நில முதல்­வ­ரு­மான சந்­தி­ர­சே­கர ராவ் புறக்­க­ணித்­துள்­ளார்.

அதி­பர் வேட்­பா­ளரை அறி­விக்­கும் வித­மாக அந்­தக் கூட்­டத்­துக்கு முதல்­வர் மம்தா பானர்ஜி ஏற்­பாடு செய்­தி­ருந்­தார்.

அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­பா­கவே பாஜ­க­வுக்கு எதி­ராக மிகப்­பெ­ரிய எதிர்க்­கட்­சி­கள் அடங்­கிய அணியை உரு­வாக்­கு­வதே தமது நோக்­கம் என மம்தா கூறி வரு­கி­றார்.

இதே­போல் காங்­கி­ரஸ் கட்­சித் தலை­மை­யும் சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது. மற்­றொரு பக்­கம் முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவும் எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளு­டன் அவ்­வப்­போது பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கி­றார்.

எதிர்க்­கட்­சி­களை ஒருங்­கி­ணைக்க நடை­பெ­றும் கூட்­டத்­தில் பங்­கேற்­கு­மாறு முதல்­வர் மம்தா பானர்ஜி சார்­பாக தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் உள்­ளிட்ட 22 எதிர்க்­கட்சித் தலை­வர்­க­ளுக்கு கடி­தம் அனுப்­பப்­பட்­டது.

ஆனால் இதில் பங்­கேற்­கப் போவ­தில்லை என மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி ஏற்­கெ­னவே மறுத்து விட்­டது. காங்­கி­ரஸ் உள்­ளிட்ட கட்­சி­கள் பங்­கேற்­கின்­றன.

இப்­போது மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்­டுக்கு அடுத்­த­ப­டி­யாக இந்­தக் கூட்­டத்தை தெலுங்­கானா ராஷ்ட்­ரிய சமிதி கட்­சி­யும் புறக்­க­ணித்­துள்­ளது. ஒரு­போ­தும் காங்­கி­ர­சு­டன் இணைந்து செயல்பட இய­லாது என முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, தேசி­ய­வாத காங்­கி­ரஸ் தலை­வர் சரத் பவாரை அதி­பர் வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்த காங்­கி­ரஸ் கட்­சித் தலைமை விரும்­பு­கிறது.

இந்­நி­லை­யில், மகாத்மா காந்­தி­யின் பேர­னான கோபா­ல­கி­ருஷ்ண காந்­தியை முன்­னி­றுத்த எதிர்க்­கட்­சி­களில் சில ஒப்­புக்­கொண்­டுள்­ள­தா­க­வும் ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இத­னால் பாஜ­க­வுக்கு எதி­ராக வலு­வான அணியை அமைக்­கும் எதிர்க்­கட்­சி­க­ளின் முயற்சி கைகூ­ட­வில்லை என்­கி­றார்­கள் அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள்.

இதற்கிடையே பாஜக சார்பில் களமிறக்கப்பட உள்ள அதிபர் வேட்பாளர் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கசியவில்லை. வேட்பாளர் யார் என்பதை அக்கட்சித் தலைமை முன்பே தீர்மானித்துவிட்ட போதிலும், எதிர்க்கட்சிகளின் அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.