ராணுவத்தின் புதிய ஆள்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது

ராணுவத்தின் புதிய ஆள்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது

2 mins read
9ec4b7b2-4b26-41d8-86c5-8b033f729996
பீகாரில் டயர்களை எரிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ஊடகம் -

பாட்னா: இந்­திய ராணு­வத்­துக்கு ஆள்­சேர்ப்பு செய்­யப்­படும் முறை­யில் மாற்­றம் செய்­யப்­ப­டு­வ­தற்­கு கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

இதை­ய­டுத்து பீகார், உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் இளை­யர்­கள் வீதி­யில் இறங்கி போராட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

நெருப்­புப் பாதை ('அக்­னி­பத்') என்ற புதிய திட்­டத்­தின் கீழ் ராணு­வத்­துக்கு ஆள்­சேர்க்­கப்­படும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

அதன்­படி, 17.5 முதல் 21 வய­துக்­குட்­பட்ட இளை­யர்­கள் ராணு­வத்­தில் சேர்த்­துக்கொள்­ளப்­ப­டு­வர். எனி­னும் அவர்­க­ளால் நான்கு ஆண்­டு­கள் மட்­டுமே ராணு­வத்­தில் பணி­யாற்ற முடி­யும்.

அதன் ­பின்­னர் ஓய்­வூ­தி­யம், பணிக்­கொடை ஆகி­யவை வழங்­கப்­பட மாட்­டாது. எனி­னும் துணை ராணு­வப் படை­யில் சேர முன்னுரிமை அளிக்­கப்­படும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

இத்திட்­டத்­திற்கு இளை­யர்­கள் மத்­தி­யில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­உள்­ளது.

பீகார், உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட வட மாநி­லங்­களில் கடந்த இரு தினங்­க­ளாக பல்­வேறு பகுதி­களில் போராட்­டங்­கள் நீடித்து வரு­கின்­றன. சில இடங்­களில் வன்­மு­றை­யும் வெடித்­துள்­ளது.

லக்­னோ­வில் ஒரு ரயில்­பெட்­டிக்கு தீ வைக்­கப்­பட்­டது. ஏரா­ள­மா­னோர் ஒன்­று­கூடி சாலை மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர். ரயில் தண்­ட­வா­ளங்­கள் மறிக்­கப்­பட்­டன.

கிழக்கு பீகார் காவல்­துறை தலை­வ­ரான சஞ்­சய் சிங் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில், 12க்கும் மேற்­பட்ட இடங்­களில் போராட்­டம் நடந்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

போராட்­டக்­கா­ரர்­கள் ஒரு ரயில் நிலை­யத்தை சூறை­யாடி உள்­ளதையும் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

"நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு எங்­க­ளுக்கு வேறு எங்கு வேலை கிடைக்­கும்? அச்­ச­ம­யம் வீடற்­ற­வர்­க­ளாக மாறி­யி­ருப்­போம். எனவே­தான் அனைவரும் சாலை மறி­ய­லில் ஈடு­பட்­டுள்­ளோம்," என்று போராட்­டக்­கா­ரர்­கள் கூறி­ய­தாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரி­வித்­துள்­ளது.

சில பகு­தி­களில் மத்­திய அர­சுக்­கும் பிர­த­ம­ருக்­கும் எதி­ராக முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டன. சிலர் சாலை­களில் வாகன டயர்­களை எரித்து தங்­க­ளு­டைய எதிர்ப்பை வெளிப்­ப­டுத்தி­னர்.

இதை­ய­டுத்து காவல்­து­றை­யினர் தடி­யடி நடத்­தி­யும் கண்­ணீர்ப் புகைக்­குண்­டு­களை வீசி­யும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை விரட்டி அடித்­த­னர்.