புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பெட்ரோல், டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு நிலவியது.
குறிப்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பல விற்பனை நிலையங்கள், பெட்ரோல், டீசல் இன்றி மூடப்பட்டன.
இதனால் பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
இந்நிலையில் கூடுதல் தேவையையும் சமாளிக்கும் வகையில் நாடு முழுவதும் போதுமான அளவுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் குறிப்பிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு திடீரென கூடுதல் தேவை ஏற்பட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தனியார் பெட்ரோல் நிலையங்களில் விற்பனை குறைந்துள்ளது. அவற்றைவிட பொதுத்துறை நிறுவனங்கள் அதிக பெட்ரோல் விற்று வருகின்றன.

