'மகளின் நிறுவனத்தை அரபு நாடுகளில் விரிவுபடுத்த கேரள முதல்வர் முயற்சி'

'மகளின் நிறுவனத்தை அரபு நாடுகளில் விரிவுபடுத்த கேரள முதல்வர் முயற்சி'

1 mins read
8079e537-bf37-4726-89a3-a3e12b641db9
-

திரு­வ­னந்­தபுரம்: தனது மகள் நடத்தி வரும் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னத்தை ஷார்­ஜாவில் தொடங்க கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் விரும்­பி­ய­தாக ஸ்வப்னா சுரேஷ் தெரி­வித்­துள்­ளார்.

கேரள அர­சி­யல் களத்­தில் புய­லைக் கிளப்­பி­யுள்ள தங்­கக் கடத்­தல் விவ­கா­ரம் தொடர்­பாக குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­களில் ஸ்வப்­னா­வும் ஒரு­வர்.

இந்­நி­லை­யில், அவர் நீதி­மன்­றத்­தில் ரக­சிய வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார். அதில் இடம்­பெற்­றுள்ள தக­வல்­கள் அடுத்­த­டுத்து வெளி­யான வண்­ணம் உள்­ளன.

இந்­நி­லை­யில், தனது மகள் நடத்தி வரும் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வ­னத்தை அரபு நாட்­டி­லும் விரிவு­ப­டுத்த கேரள முதல்­வர் விரும்­பி­ய­தா­க­வும் இதற்­காக ஷார்­ஜா­வின் சுல்­தான் கேரளா வந்தபோது அவரை பின­ராயி விஜ­யன் சந்­தித்­த­தா­க­வும் ஸ்வப்னா தமது வாக்­கு­மூ­லத்­தில் குறிப்­பிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

எனி­னும் ஷார்ஜா அரசு இதற்கு ஒப்­புக்­கொள்­ள­வில்லை என்­றும் கேரள முதல்­வ­ரின் விருப்­பம் நிறை­வே­ற­வில்லை என்­றும் ஸ்வப்னா தெரி­வித்­துள்­ள­தாக ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வரின் குடும்பத்தாருக்கும் தொடர்புள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் ஏற்கெனவே குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில், அவரது தரப்பில் இருந்தும் ஊடகங்கள் மூலமாகவும் வெளியாகும் தகவல்கள் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.