21 அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை

21 அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை

1 mins read
37dcbb23-027f-466b-a55c-3d087fc0eef2
-

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் அரசு உயர் அதி­கா­ரி­கள் 21 பேரின் வீடு, அலு­வ­ல­கங்­களில் அம்­மா­நில ஊழல் தடுப்­புப் பிரிவு காவல்­து­றை­யி­னர் அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

மாநி­லம் தழு­விய அள­வில் சுமார் 80க்கும் மேற்­பட்ட இடங்­களில் நடந்த சோத­னை­யின்­போது பல கோடி ரூபாய் மதிப்­புள்ள ரொக்­கப் பணம், சொத்து ஆவ­ணங்­கள், தங்க நகை­கள் கைப்­பற்­றப்­பட்­டன.­

வரு­மா­னத்­திற்கு அதி­க­மாக சொத்து சேர்த்­துள்­ள­தாக எழுந்த புகா­ரின் பேரில் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. அனை­வ­ரது வீடு­க­ளி­லும் ஒரே சம­யத்­தில் சோதனை நடத்­தப்­பட்­டது. பெங்­க­ளூ­ரு­வில் மட்­டும் பத்து இடங்­கள் குறி வைக்­கப்­பட்­டன. இந்த நட­வ­டிக்­கை­யில் முந்­நூற்­றுக்­கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

உய­ர­தி­காரி ஒரு­வ­ரது வீட்­டில் இருந்து இரண்டு கிலோ தங்­கம், மற்­றொ­ரு­வர் வீட்­டில் இருந்து ரூ.20 லட்­சம் ரொக்­கப்­ப­ணம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

வேறோர் அதி­காரி தன் வீட்­டுக் கழி­வ­றை­யில் ரூ.21 லட்­சம் ரொக்­கப் பணத்தை சில நெகிழி உறை­களில் போட்டு பதுக்கி வைத்­தி­ருந்­த­தும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.