அசாம்: 28 மாவட்டங்களில் 3,000 கிராமங்கள் மூழ்கின

அசாம்: 28 மாவட்டங்களில் 3,000 கிராமங்கள் மூழ்கின

2 mins read
6a4f1cad-84ea-46e6-b756-389338d9dad8
-

கனமழைக்கு இதுவரை 54 பேர் பலி; 19 லட்சம் பேர் பாதிப்பு

கவு­காத்தி: அசாம், மேகாலயா மாநிலங்­களில் கடந்த சில தினங்­களாக நீடித்து வரும் கன­மழை, வெள்­ளப்­பெ­ருக்­கின் கார­ண­மாக இது­வரை 54 பேர் மாண்­டு­விட்டனர்.

சுமார் மூவா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட கிரா­மங்­களை வெள்­ளம் சூழ்ந்­துள்ள நிலை­யில், 19 லட்­சம் மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அசாம் மாநி­லத்­தில் கன­மழை கார­ண­மாக பல்­வேறு இடங்­களில் தொடர் நிலச்­ச­ரிவு ஏற்­பட்டு வரு­கிறது. முக்­கிய ஆறு­களில் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­வ­தால், கரை­யோர மக்­கள் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டுள்­ள­னர்.

28 மாவட்­டங்­களில் உள்ள 19 லட்­சம் பேர் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் மீட்­புப் பணிகள் துரித கதி­யில் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அசாம் மாநில பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் 43 ஹெக்­டேர் விளை நிலங்­கள் வெள்ள நீரில் மூழ்­கி­உள்­ள­தால் விவ­சா­யி­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

வடகிழக்கு மாநி­லங்­களில் ஒன்­றான திரி­பு­ரா­வை­யும் கன­மழை விட்­டு­வைக்­க­வில்லை. அங்கு தலை­ந­கர் அகர்­த­லா­வில் கடந்த 60 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு மழை கொட்­டித் தீர்த்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் மேகத்­திரள் கார­ண­மாக ஆறு மணி நேரத்­தில் மட்­டும் 145 மில்­லி­ மீட்­டர் மழை பதி­வாகி உள்­ளது.

இதே­போல் மேகா­ல­யா­வில் உள்ள சிர­புஞ்சி பகு­தி­யில் நூறாண்டு­க­ளுக்­குப் பிறகு அதிக மழை பெய்­துள்­ளது. உல­கி­லேயே அதிக மழைப்­பொ­ழிவு உள்ள பகுதி சிர­புஞ்­சி­ ஆகும்.

பங்­ளா­தேஷ் நில­வ­ரம்

இதற்­கி­டையே, இந்­தி­யா­வின் அண்டை நாடான பங்­ளா­தேஷ் தொடர் மழை­யால் பெரும் சேதங்­களைச் சந்­தித்­துள்­ளது. அங்கு சுமார் நான்கு மில்­லி­யன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

குறிப்­பாக சில்­ஹெட், சுனம்­கஞ்ச் மாவட்­டங்­கள் வெள்­ளக்­கா­டாக மாறி­யுள்­ளன. இவ்­விரு மாவட்­டங்­க­ளு­ட­னான சாலை போக்­கு­வ­ரத்து, தக­வல் தொடர்பு ஆகி­யன துண்டிக்­கப்­பட்­டுள்­ளன.

நாடு முழு­வ­தும் மழை­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள பெரும்­பா­லான பகு­தி­களில் மின்­வி­நி­யோ­க­மும் தடை­பட்­டுள்­ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.