விருது பெற்றது பெங்களூரு விமான நிலையம்

விருது பெற்றது பெங்களூரு விமான நிலையம்

1 mins read
304d05c2-ec85-49c0-a4b9-e34e8f3c011d
-

புதுடெல்லி: தெற்காசியா வின் சிறந்த விமான நிலையமாக பெங்களூரு கேம்பகவுடா அனைத்துலக விமான நிலையத்தை ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனம் தேர்வு செய்துள்ளது.

விமான நிலைய வாயி லில் தொடங்கி விமானம் புறப்படும் வரையிலான பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகளுக்கான வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படை யில் விருதுகள் வழங்கப் படுகின்றன.

அந்த வகையில் கேம்பகவுடா விமான நிலையம் இந்தியாவிலும் தெற்காசிய அளவிலும் சிறந்த நிலையமாக விருது பெற்றுள்ளது. விருதுக்கு தேர்வானது குறித்து பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் தனது சமூக ஊடகப் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.