பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான சீனிவாச கவுடா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார்.
கொரோனா நெருக்கடி வேளையில், வீட்டில் இருந்தபடி வேலை பார்த்தபோது, கால்நடைப் பராமரிப்பு தொடர்பான பயிற்சியில் பங்கேற்றுள்ளார்.
"அதில் ஆர்வம் அதிகரித்தது. தகவல் தொழில்நுட்பத்துறை வேலையை உதறிவிட்டு ஆடு, கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டபோது குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கவே, அடுத்து முயல் பண்ணை அமைத்து அதிலும் வெற்றி கண்டேன்.
"இப்போது 20 கழுதைகளுடன் கூடிய பண்ணையை அமைத்துள்ளேன். அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்க கழுதைப் பால் பயன்படுத்தும் நிறுவனத்துடன் ரூ.17 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளேன். பண்ணையை முழுமையாக தயார் செய்த ஒரே வாரத்தில் இந்தப் ஒப்பந்த வாய்ப்பு அமைந்தது.
"முப்பது மில்லி கழுதைப் பாலை ரூ.150க்கு விற்கிறேன். முன்பு கேலி செய்தவர்கள் எல்லாம் இப்போது என்னைப் பாராட்டுகிறார்கள்," என்கிறார் சீனிவாச கவுடா.

