பாதபூசை செய்த மோடி

பாதபூசை செய்த மோடி

1 mins read
e30fe17a-4963-485f-ba2d-6d3f9b08b881
-

தமது தாயார் ஹீராபென்னின் நூறாவது பிறந்தநாளையொட்டி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது வீட்டில் அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி. மேலும், தாய்க்கு மாலை அணிவித்து, காலைத் தொட்டு வணங்கி, பாதங்களைக் கழுவி பாத பூசை செய்து, அந்தத் தண்ணீரை தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் பிரதமர் மோடி. இதற்கிடையே தமது டுவிட்டர் பதிவு ஒன்றில், தமது தாயார் முன்பு வீட்டுச் செலவை சமாளிக்க பல வீடுகளில் பாத்திரம் கழுவி உள்ளார் என்றும் பெற்ற குழந்தைகளுக்காக வலி மிகுந்த வேலைகளைச் செய்ததாகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் மோடி. படம்: ஊடகம்