பாட்னா: புது டெல்லியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த 'ஸ்பைஸ்ஜெட்' பயணிகள் விமானம் பாட்னா நகரில் அவசரமாகத் தரையிறங்கியது.
விமானத்தின் இடது புறத்தில் இருக்கும் 'எஞ்சின்' இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டதால் அவ்வாறு செய்ய நேரிட்டது.
பாட்னா விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புது டெல்லிக்குப் புறப்பட்டது.
சிறிது நேரத்திலேயே மீண்டும் பாட்னாவில் தரையிறங்கிய அதில் 185 பயணிகள் இருந்தனர்.
அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
'எஞ்சின்' இயந்திரத்தில் பறவை மோதியிருக்கலாம் என்றும் அதனால் தீ மூண்டிருக்கலாம் என்றும் சில தகவல்கள் தெரிவித்தன.

