கலவரத்தைத் தூண்டியவர் கைது

கலவரத்தைத் தூண்டியவர் கைது

2 mins read
3aa98d76-5682-4c17-b547-d86554c30b96
செகந்திராபாத் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட ரயில். படம்: ராய்ட்டர்ஸ் -

ஆந்திரா: செகந்திரபாத் ரயில் நிலைய கலவரத்தின் பின்னணியில் 'அக்னிபாதை ' திட்டத்தை எதிர்த்து தனியார் ராணுவ பயிற்சி மையம் செயல்பட்டது அம்பலமாகியுள்ளது.

இந்தக் கலவரத்தில் முதன்முதலில் 2 ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினரின் விசாரணையின்போது, இதன் பின்னணியில் தனியார் ராணுவ பயிற்சி மையம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், நரசராவ் பேட்டையைச் சேர்ந்த ராணுவ பயிற்சி மையத்தின் இயக்குநரான முன்னாள் ராணுவ வீரர் சுப்பாராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தன்னிடம் பயிற்சி பெறும் இளைஞர்களை சுப்பாராவ் நாடு முழுவதும் நடைபெறும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமிற்கு அழைத்துச் செல்வார்.

செகந்திராபாத் ரயில் நிலைய போராட்டத்தில் அவர்களை சுப்பாராவ் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபட வைத்ததுடன் அவர்களுக்கு தண்ணீர், மோர் மற்றும் உணவு வழங்கியுள்ளார்.

இதுபற்றி ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி கூறுகையில், "ராணுவத்தில் சேர ஒழுக்கம் மிக அவசியம்.

வன்முறையில் ஈடுபட் டு பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் ராணுவத்தில் சேர முடியாது.

"நாசவேலைகளில் ஈடுபடவில்லை என காவல்துறையிடமிருந்து சான்று பெற்றுத் தந்தால்தான் ராணுவத்தில் சேரமுடியும்.

"அக்னிபாதை திட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் மூன்று படைகளிலும் சேர வாய்ப்புள்ளது.

"அக்னிவீரர்களுக்கு ராணுவ வீரர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். அக்னிவீரர்கள் உயிர் தியாகம் செய்தால் ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும். அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்படாது," என்று அறிவித்துள்ளார்.