இயக்குநர் அதிரடி கைது

இயக்குநர் அதிரடி கைது

3 mins read
0664b814-354c-4724-b84b-c500df19c28f
-

ஆந்­திரா: செகந்­தி­ராபாத் ரயில் நிலைய கல­வ­ரத்­தின் பின்­ன­ணி­யில் 'அக்­னி­பாதை' திட்­டத்தை எதிர்த்து தனி­யார் ராணுவப்் பயிற்சி மையம் செயல்­பட்­டது அம்­ப­ல­மாகி உள்­ளது.

இந்த கல­வ­ரத்­தில் முதன்­மு­த­லில் 2 ரயில் பெட்­டி­க­ளுக்குத் தீ வைக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் குறித்து காவல் துறையினர் விசா­ரித்­த­போது, இதன் பின்­ன­ணி­யில் தனி­யார் ராணுவப் பயிற்சி மையம் இருப்­பது தெரியவந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, ஆந்­திர மாநி­லம், குண்­டூர் மாவட்­டம், நர­ச­ராவ்­பேட்­டையைச் சேர்ந்த ராணுவப் பயிற்சி மையத்­தின் இயக்­கு­ந­ரான முன்­னாள் ராணுவ வீரர் சுப்­பா­ராவை காவல்துறையினர் கைது செய்­துள்­ள­னர்.

தன்­னி­டம் பயிற்சி பெறும் இளை­ஞர்­களை நாடு முழு­வ­தும் நடை­பெ­றும் ராணுவ ஆள்சேர்ப்பு முகா­மிற்கு அழைத்­துச் செல்­வார்.

செகந்­தி­ரா­பாத் ரயில் நிலைய போராட்­டத்­தில் அவர்­களை

சுப்­பா­ராவ் தூண்­டி­விட்டு கல­வ­ரத்­தில் ஈடு­பட வைத்­த­து­டன் அவர்­க­ளுக்குத் தண்­ணீர், மோர், சாப்­பாடு வழங்­கி­யுள்­ளார்.

கல­வ­ரத்­துக்கு முந்­தைய நாள், சுப்பாராவின் பயிற்சி மையத்­தில் இருந்து 450 பேர் ஹைத­ரா­பாத் வந்து கல­வ­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். அவர்­களில் 52 பேரை காவல் துறையினர் கைது செய்­துள்­ள­னர்.

இந்த ரயி­லுக்குத் தீ வைப்பு சம்­ப­வத்­தைத் தொடர்ந்து நாடு முழு­வ­தும் 12 ரயில்­க­ளுக்குத் தீ வைக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால் சுமார் 220 ரயில்­க­ளின் சேவை ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

ரயில்­கள் மட்­டு­மன்றி நேற்று காலை பீகார் உள்­பட சில மாநி­லங்­களில் லாரி­கள், மோட்­டார் சைக்­கிள்­கள் போன்ற வாக­னங்­

க­ளுக்­கும் தீ வைக்­கப்­பட்­டன.

இதன் கார­ண­மாக ரூ.170 கோடிக்கு மேல் இழப்பு ஏற்­பட்­டுள்­ளது. ரயில்­கள் ரத்து கார­ண­மாக நாடு முழு­வ­தும் லட்­சக்­க­ணக்­கான பய­ணி­கள் பாதிப்­புக்­குள்­ளாகி இருக்­கி­றார்­கள். 'அக்­னி­பாதை' திட்­டத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து பீகா­ரில் அகில இந்­திய மாண­வர்­கள் அமைப்பு 24 மணி நேர கடை­ய­டைப்­புக்கு அழைப்பு விடுத்­துள்­ளது. லாலு பிர­சாத் யாத­வின் ராஷ்­டி­ரிய ஜன­தா­ த­ளம் கட்சி இந்த முழு அடைப்­புக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் இந்த திட்­டத்தை திரும்­பப் பெற­வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்தி காங்­கி­ரஸ் சார்­பில் போராட்­டம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

டெல்லி ஜந்­தர் மந்­த­ரில் இன்று நடை­பெ­றும் போராட்­டத்­தில் காங்­கி­ரஸ் எம்­பிக்­கள், நிர்­வா­கி­கள் தொண்­டர்­கள் கலந்துகொண்டனர்.

இது­கு­றித்து ராகுல் காந்தி, காங்­கி­ரஸ் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் பிரி­யங்கா காந்தி ஆகி­யோர் தங்­க­ளு­டைய டுவிட்­ட­ரில் வேளாண் சட்­டம் போல இது­வும் திரும்­பப் பெற­வேண்­டும் என்று பதி­விட்­டுள்­ள­னர்.

'அக்னி பாதை' திட்­டம் தொடர்­பாக முப்­படைத் தள­ப­தி­க­ளு­டன் மத்­திய பாது­காப்­புத்­துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் இரண்­டா­வது நாளாக ஆலோ­சனை நடத்தினர்.

இது­பற்றி ராணுவ விவ­கா­ரங்­கள் துறை கூடு­தல் செய­லா­ளர் லெப்­டி­னன்ட் ஜென­ரல் அனில் புரி கூறு­கை­யில், "ராணு­வத்­தில் சேர ஒழுக்­கம் மிக அவ­சி­யம். வன்­மு­றை­யில் ஈடு­பட்டு பொதுச்­

சொத்­துகளைச் சேதப்­ப­டுத்­து­வோர் ராணு­வத்­தில் சேர முடி­யாது.

"நாச­வே­லை­களில் ஏதும் ஈடு­ப­ட­வில்லை என காவல்­துறை சான்று பெற்­றுத் தந்­தால்­தான் ராணு­வத்­தில் சேர முடி­யும்.

"அக்­னி­பாதை' திட்டத்தால் ஒவ்வோர் ஆண்டும் இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் மூன்று படைகளிலும் சேர வாய்ப்பு உள்ளது.

"அக்­னி­வீ­ரர்­க­ளுக்கு ராணுவ வீரர்­க­ளுக்கு இணை­யான அனைத்து சலு­கை­களும் வழங்­கப்­படும். அக்­னி­வீ­ரர்­கள் உயிர் தியா­கம் செய்­தால் ரூ.1 கோடி நிவா­ர­ணம் வழங்­கப்­படும். 'அக்னி­­பாதை' திட்­டம் திரும்­பப் பெறப்­ப­டாது," என்று அறி­வித்­துள்­ளார்.

'அக்னிபாதை' திட்டத்தைத் எதிர்த்து கலவரத்தைத் தூண்டிவிட்ட ராணுவப் பயிற்சி மையம்

'அக்னிபாதை' திட்டத்தைத் எதிர்த்து பீகாரில் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. படம்: இந்திய ஊடகம்