தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

3 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப் பெரிய மொட்டை மாடி

2 mins read
313a14fb-35d8-4812-a32d-307f5bf7fc41
-

புனே: உல­கின் மிகப்­பெ­ரிய மொட்டை மாடியை 3 ஏக்­கர் பரப்­ப­ள­வில் அமெ­ரிக்க முன்­னாள் அதி­பர் டிரம்ப்­பின் நிறு­வ­னம் அமைத்து வரு­கிறது.

உல­கின் மிகப்­பெ­ரிய மொட்டை மாடி­யாக சிங்­கப்­பூ­ரின் 'மரினா பே சேண்ட்ஸ்' கட்டடம் விளங்கி வரு­கிறது. இது 2.5 ஏக்­கர் பரப்­ப­ள­வில் அமைந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்க முன்­னாள் அதி­பர் டிரம்ப்­புக்குச் சொந்­த­மான, 'டிரம்ப் ரியல் எஸ்­டேட் நிறு­வ­னம்,' மகா­ராஷ்­டிரா மாநி­லம், புனே­யில் 3 ஏக்­கர் பரப்­ப­ள­வில் பிரம்­மாண்ட மொட்டை மாடியைக் கட்டி வரு­கிறது. டிரம்ப் நிறு­வ­னத்­தின் இந்­திய கிளை­யின் அதி­காரி கல்­பேஷ் மேத்தா இதை தெரி­வித்­துள்­ளார்.

அவர் அது­பற்றி கூறு­கை­யில், ''புனே­யில் 3 ஏக்­க­ரில் கட்­டப்­பட்டு வரும் இந்த மொட்டை மாடி­யின் பணி­கள் 50 விழுக்­காடு முடி­வ­டைந்­து­விட்­டன. 17 மாடி­கள் அடங்­கிய 5 கட்­டடங்­க­ளின் மீது இந்த மொட்டை மாடி அமைய இருக்­கிறது.

"இதில் குழந்­தை­க­ளுக்­கான விளை­யாட்டுப் பூங்கா, பூந்­தோட்­டம், நடைப்­ப­யிற்­சிப் பாதை, உடற்­ப­யிற்­சிக்­கூ­டம், நீச்­சல் குளம், உண­வ­கம், உண­வ­ருந்­தும் பகுதி ஆகி­யவை அமை­கின்­றன.

"இந்த அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பில் 70 விழுக்­காடு வீடு­கள் விற்­பனை செய்­யப்­பட்­டு­விட்­டன. இதன் அருகே 6.7 ஏக்­க­ரில் மற்­றொரு கட்­ட­டம் கட்­டும் பணி தொடங்­கப்­பட்­டுள்­ளது.

"இந்த கட்­ட­டத்­தின் உள்­கட்­ட­மைப்பை பாலி­வுட் வடி­வ­மைப்­பா­ளர் சுசன் கான் வடி­வ­மைத்­துள்­ளார். இவர் நடி­கர் ஹிருத்­திக் ரோஷ­னின் முன்­னாள் மனைவி,'' என்­றார்.

பூங்கா, பூந்தோட்டம், உடடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம் ஆகியவற்றுடன் 3 ஏக்­கர் பரப்­ப­ள­வில் மொட்டை மாடி.

படம்: ஊடகம்