அதிபர் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ்

அதிபர் தேர்தலில் லாலு பிரசாத் யாதவ்

1 mins read
9861962f-c2b5-451d-a6f8-8c5eef56aef6
-

புதுடெல்லி: அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. வருகிற 29ஆம் தேதியுடன் மனுத் தாக்கல் முடிவடைகிறது. மனுத் தாக்கல் செய்தவர்களில் ஒருவரின் பெயர் லாலு பிரசாத் யாதவ்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் பெயர் கொண்டவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அவர் பீகார் மாநிலம் சரண் பகுதியைச் சேர்ந்தவர். 42 வயதான இந்த லாலு பிரசாத் யாதவ் 2017ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை எதிர்த்துப் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.