புதுடெல்லி: பாட்னாவில் இருந்து புறப்பட்ட விமானத்தின் இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில், எரி
பொருள் விலையும் விமான நிறு
வனங்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் லாபத்தில்
இயங்குவதே விமான நிறுவனங்
களுக்குச் சவாலாக உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் விமான நிறுவனங்கள் குறித்து வரும் சிறு புகாரும் விமான நிறுவனங்களுக்குக் கெட்ட பெயரைப் பெற்றுத் தந்துவிடும்.
அப்படியொரு சம்பவம்தான் நேற்றைய தினம் 'ஸ்பைஸ்ஜெட்' நிறு
வனத்திற்கு நடந்துள்ளது.
நேற்றுக் காலை 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்திற்குச் சொந்தமான SG723 என்ற இந்த விமானம் 185 பயணிகளுடன் பாட்னாவில் இருந்து கிளம்பியது. இருப்பினும் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்தது.
அதையடுத்து விமானம்
உடனடியாக பத்திரமாகத் தரை இறக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனை
வரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதுகுறித்து விரிவான தொழில்நுட்ப விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் தீ விபத்திற்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்
படுகிறது. இதையடுத்து பயணிகள் அனைவரும் தற்காலிகமாக விமான நிலையத்திலேயே தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விமான இயந்திரத்தில் தீப்பற்றியதை அப்பகுதியில் வசிக்கும்
மக்களே முதலில் பார்த்துள்ளனர். உடனே அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் விமான நிலைய
அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் விமான ஓட்டுநருக்குத் தீப்பற்றியது குறித்துத் தெரிவிக்கப்பட்டு, விமானம் உடனடியாக பாட்னா விமான நிலையத்திற்கே திரும்பியதாக பாட்னா மாவட்ட குற்றவியல் நீதிபதி சந்திரசேகர் சிங் தெரிவித்தார்.
மேலும், 185 பயணிகளும் பத்திரமாக உள்ளதாகவும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணத்தை பொறியியல் குழு ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

