300 விமானங்களை வாங்கவுள்ள ஏர் இந்தியா

300 விமானங்களை வாங்கவுள்ள ஏர் இந்தியா

1 mins read
47e855fb-7b0a-4728-954a-2c677cd41110
படம்: IANS -

ஏர் இந்தியா விமான நிறுவனம் கிட்டத்தட்ட 300 விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. வர்த்தக விமான வரலாற்றிலேயே ஒரு விமான நிறுவனம் இத்தனை விமானங்களை வாங்குவது இதுவே முதல்முறை. புதிய தலைமைத்துவத்தின் கீழ் புத்தம்புது விமானங்களைப் பணியில் அமற்றும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுவதாகக் கூறப்பட்டது.

ஏர்பசின் ஏ320நியோ ரக விமானங்கள் அல்லலு போயிங் 737மேக்ஸ் ரக விமானங்கள் அல்லது இரு நிறுவனங்களிடமிருந்தும் விமானங்களை ஏர் இந்தியா வாங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டது.

விமானங்களை வாங்க கிட்டத்தட்ட $40.5 பில்லியன் செலவிடப்படலாம். இது குறித்து கருத்துரைக்க ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துவிட்டது.

இவ்வாண்டு தொடக்கத்தில் டாடா குழு­மம் ஏர் இந்­தியா நிறு­வ­ன­த்தை வாங்கியது.