மழை, வெள்ளத்தில் மிதக்கும் வட இந்திய மாநிலங்கள்; பலி எண்ணிக்கை 71

மழை, வெள்ளத்தில் மிதக்கும் வட இந்திய மாநிலங்கள்; பலி எண்ணிக்கை 71

2 mins read
9f4fb8f1-914b-466c-85a5-8ebbb060d42b
அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்கள் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். படம்: ஊடகம் -

கவு­காத்தி: இந்­தி­யா­வில் வட­கிழக்கு, வட மாநி­லங்­களில் நீடித்து வரும் கன­ம­ழைக்கு நேற்று முன்தி­னம் மேலும் 26 பேர் பலி­யாகி உள்­ள­னர். இதை­ய­டுத்து மொத்த பலி எண்­ணிக்கை 71ஆக அதி­க­ரித்­துள்­ளது.

இதற்­கி­டையே, அண்டை நாடான பங்­ளா­தே­ஷில் லட்­சக்­க­ணக்­கான மக்­கள் கன­மழை கார­ண­மாக வீடு­களில் முடங்கி உள்­ள­னர். அங்கு பாதிக்­கப்­பட்ட இடங்­களில் வெள்ள நீர் வடி­யத் தொடங்கி உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அசா­மில் மழை நீடித்து வரும் நிலை­யில் நிலச்­ச­ரி­வு­களும் ஏற்­பட்டு வரு­கின்­றன. அம்­மா­நி­லத்­தில் உள்ள 33 மாவட்­டங்­களில் சுமார் 5,140 கிரா­மங்­களை வெள்ள நீர் சூழ்ந்­துள்­ளது. பல்­வேறு கிரா­மங்­களைச் சேர்ந்த நூறா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் நிவா­ரண முகாம்­களில் அடைக்­க­லம் புகுந்­துள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் நிலச்­ச­ரி­வில் சிக்கி மேலும் மூன்று பேரும் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்ட மேலும் ஆறு பேரும் பலி­யா­கி­விட்­ட­னர் என்று அம்­மா­நில பேரி­டர் மேலாண்மை ஆணை­யம் தெரி­வித்­தது.

பீகார் மாநி­லத்­தி­லும் பலத்த மழை நீடித்து வரு­கிறது. கிழக்கு பீகா­ரில் மின்­னல் தாக்­கி­ய­தில் 17 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

அசாம் மாநி­லத்தை கடந்த மூன்று மாதங்­க­ளா­கவே பருவ மழை பதம் பார்த்து வரு­கிறது. கடந்த ஏப்­ரல் மாதம் பருவ மழைக் காலத்­துக்­கும் முன்பே அங்கு மழை பெய்­யத் தொடங்­கி­யது.

அச்­ச­ம­யம் 44 பேர் மழை, வெள்­ளத்­துக்­குப் பலி­யா­கி­னர். வெள்ள நீர் வடி­வ­தற்கு சில வாரங்­கள் ஆகின. எனி­னும் தற்­போது பெய்து வரும் பலத்த மழை கார­ண­மாக அம்­மாநிலம் மீண்­டும் வெள்­ளக்­கா­டாக மாறி­யுள்­ளது.

மழை­யு­டன் தொடர்­பு­டைய மரணச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 71ஆக கூடி­யுள்­ளது.

மேகா­ல­யா­வில் வியா­ழக்­கி­ழ­மை­யன்று ஏற்­பட்ட நிலச்­சரி­வில் சிக்கி 16 பேர் மாண்டு­விட்­ட­னர். கர்நாடகாவிலும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பங்ளாதேஷ் நிலவரம்

இதற்கிடையே, அண்டை நாடான பங்ளாதேஷில் வடகிழக்கு மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைந்ததை அடுத்து அங்கு வெள்ள நீர் மெல்ல வடிந்து வருகிறது. எனினும் சில்லெட் மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

நிவாரண மையங்கள் நிரம்பி வழிகின்றன. கடும் உணவு, குடிநீர்ப் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் மக்கள் வீடு திரும்ப அஞ்சுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஏராளமானோர் வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது.

அந்நாட்டின் தென்கிழக்கு மாவட்டங்களிலும் கனமழை நீடித்து வருவதையடுத்து, நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.