விண்வெளிக் கழிவுகள்: இந்தியாவின் செயற்கைக் கோள்களைக் காப்பாற்ற போராடும் இஸ்‌ரோ விஞ்ஞானிகள்

விண்வெளிக் கழிவுகள்: இந்தியாவின் செயற்கைக் கோள்களைக் காப்பாற்ற போராடும் இஸ்‌ரோ விஞ்ஞானிகள்

2 mins read
e43c4600-76d9-4106-a481-d0677fb3dd01
-

புது­டெல்லி: இந்­திய செயற்­கைக்­கோள்­கள் மீது விண்­வெ­ளிக் கழிவு­கள் மோதா­மல் தடுக்க நேத்ரா என்ற திட்­டம் உரு­வாக்­கப்­பட்­டுள்ளது.

இதற்­காக லடாக் எல்­லைப் பகுதி­யில் அதி­ந­வீன தொலை­நோக்கி அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக இஸ்‌ரோ (இந்­திய விண்­வெளி ஆய்­வுக்­க­ழ­கம்) தெரி­வித்­துள்­ளது.

இந்த தொலை­நோக்கி மூலம் விண்­வெ­ளி­யில் உள்ள நாற்­பது சென்­டி ­மீட்­டர் அள­வுள்ள சிறிய கழி­வு­க­ளை­யும் துல்­லி­ய­மா­கக் கண்டு­பி­டிக்க இய­லும் என்­கி­றார்­கள் விஞ்­ஞா­னி­கள்.

இந்­தியா கடந்த பல ஆண்­டு­களில் பல்­வேறு செயற்­கைக்­கோள்­களை அனுப்­பி­யுள்­ளது. அவற்­றுள் பெரும்­பா­லா­னவை சிறப்­பா­கச் செயல்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், விண்­வெ­ளிக் கழி­வு­களில் இருந்து அந்­தச் செயற்கைக்­கோள்­க­ளைக் காப்­பாற்ற இஸ்‌ரோ போராடி வரு­கிறது.

இந்­தியா கடந்த பல ஆண்­டு­களில் பல்­வேறு செயற்­கைக்­கோள்­களை அனுப்­பி­யுள்­ளது.

செயற்­கைக்­கோள்­கள் மீது விண்­வெ­ளிக் கழி­வு­கள், விண்­கற்­கள் மோதி­னால் அவை பயனற்­ற­தா­கி­வி­டும்.

இத­னால் செயற்­கைக்­கோள்­களை தின­மும் கண்­கா­ணிக்க வேண்­டி­யுள்­ளது. இதற்கு அதி­நவீன தொலை­நோக்­கி­கள், ரேடார்­கள் போன்­றவை பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், நேத்ரா என்ற திட்­டத்­தின்கீழ் லடாக்­கில் அதி நவீன தொலை­நோக்கி அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, 2,500 கிலோ மீட்டர் வரை பார்க்­கக்கூடிய, 10 சென்டி மீட்­டர் அளவு உள்ள ரேடாரை அமைக்க விஞ்­ஞா­னி­கள் திட்­ட­மிட்­டுள்­ள­னர். இந்த ரேடார் கருவி விண்­வெளிக் கழி­வு­களை மிகத் துல்­லி­ய­மாகக் கண்­ட­றி­யும் என்­றும் அசாம் மாநி­லத்­தில் இதை நிறு­வு­வது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­கிறது.

இதற்­கி­டையே, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இது­வரை இந்­திய செயற்­கைக்­கோள்­க­ளின் மீது விண்­வெளிக் கழி­வு­கள் மோது­வதை 70 முறை இஸ்ரோ தடுத்­துள்­ளது.

நடப்­பாண்­டில் மாதத்­துக்கு இரு­முறை என்ற வகை­யில் இது­வரை பத்து விண்­வெளி மோதல்­களைத் தடுத்­துள்­ள­தாக இஸ்‌ரோ தெரி­வித்­துள்­ளது.

"கடந்த 2021, 2022ஆம் ஆண்டு­களில் மட்­டுமே 31 மோதல்­கள் தடுக்­கப்­பட்டு உள்­ளன. 2020ஆம் ஆண்­டில் 12 முறை­யும் 2019, 2018ஆம் ஆண்­டு­களில் தலா எட்டு முறை­யும் மோதல்­கள் ஏற்­படு­வதை விஞ்­ஞா­னி­கள் சிர­மப்­பட்டு தடுத்­துள்­ள­னர். விண்­வெ­ளிக் கழி­வு­கள் எந்­தத் திசை­யில், எந்த அளவு வேகத்­து­டன் நகர்­கின்றன என்­பதை முதலில் கண்­ட­றிய வேண்டும்.

"அதன் பின்­னர் செயற்­கைக் கோள்­களை அதன் பாதை­யில் இருந்து மேல் அல்­லது கீழ்­நோக்கி இறக்கி வில­கச் செய்­தி­ட­லாம். இதன்மூலம் மோதல் தவிர்க்­கப்­படும். நேத்ரா திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டால் இந்த நட­வ­டிக்கை எளி­தா­கும்," என்­கி­றார்­கள் விஞ்ஞா­னி­கள்.